பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 திருவாசக ஒளிநெறி

51 தலைப்புக்களிலும், பிறபொருட் பகுதியை 231 தலைப்புக்களிலும், இலக்கணப் பகுதியை 88 தலைப்புக்களிலும் அமைத்திருப்பதும்: திருவாசகம் ஒரு முத்தமிழ் நூல், மணிவாசகரைப் பற்றிய குறிப்புக்கள், அரிய சொற்கள், சொற்றோடர்கள் ஆகிய மூன்று தலைப்புக்களைப் பின்னிணைப்பாக அமைத்திருப்பதும் பெரிதும் போற்றுதற்குறியன.

மூவர் தேவாரப் பதிகங்கட்குத் தனித்தனி தேவார ஒளிநெறிக் கட்டுரை நூல் வெளியிட்டிருப்பதுபோல் திருவாசக ஒளிநெறிக் கட்டுரை நூல் முன்னமே கழகவழி வெளிவந்துளது.

85 அகவையினையடைந்த சிவத்திரு ஐயா அவர்கள் மூல நோயினால் உட்கார்ந்து எழுதமுடியாதபடி உடல் மெலிந்து குறுகிக் கூன் விழுந்த கிலேயில் அந்நோயினே அருளால் மறந்து திருக்கோவையார்க்கு 'ஒளிநெறி' எழுதி வருகின்றார்கள்.

பல பேராசிரியர்களைக்கொண்டு பல ஆண்டுகளில் பெரும் பொருட்செலவில் ஒரு பல்கலைக் கழகம் செய்து முடிக்கவேண்டிய இவ்வரும் பெரும் தெய்வப்பணியை நம் பெரியாரவர்கள் எவர் துணையுமின்றி தாம் ஒருவரே மேற்கொண்டு முடித்திருப்பது திருவருட் செயலேயாகும், இதற்கெனவே முருகப்பெருமான் இவர்களைப் படைத்து இத் தென்றமிழ் நாட்டுக்கு அனுப்பி யிருக்கிருன் என்பதில் எட்டுனையும் ஐயமில்லை.

திருத்தணிகைப்பெருமான் பெயரைக்கொண்ட நம் பெரிய னாரவர்களின் தந்தையார் பெயர் திரு சுப்பிரமணிய பிள்ளை, தமையனார் பெயர் திரு. சண்முகம் பிள்ளை, தம்பியார் பெயர் திரு. ஆறுமுகம் பிள்ளை என்ப. இவர்கள் இந்நூலுக்கு எழுதிய முகவுரையினை படிப்பவர் இவர் தம் குடும்பமே சுப்பிரமணியக் கடவுள் பெயரை: தாங்கி விளங்குவது கண்டு கழிபேருவகைஅடைவர். அடுத்த பக்கம்