பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 * பொழிப்புரை - த.கோவேந்தன்

திரு முடியும் பரதனது மகிழ்ச்சிக்காகப் புனைந்து கொண்டாய் ஒப்பற்ற வனே!

துணைவியராக அருகே இருந்த உருக்குமணி சத்தியபாமை ஆகிய இருவரோடு கூடி, புனுகில் முழுகிய கலவையாகிய மான்மதம் பூசிய பூரித்த முலைகளும் முகில் போன்ற கூந்தலும் உடைய ஆய்மகளிர், ஆற்றில் நீராடிக் குதித்தார்கள்.

அப்போது அவர்கள் மணற்குவியலின் மீது வைத்த உடைகளைத் திருடிப் போனாய்!

அதனால் நீங்காத துன்பமே மிகுந்த வருந்தினர் அப்போது முகில் களின் துளி, பரவுகின்ற இடிபோல உச்சியில விழுந்தது. அப்போது துய ருள்ள ஆ (பசுநிரைகளும் என் செய்வதென்று அறியாது நிலைதளர்ந்த இடையரும் மகிழ்வு கொள்ள, கோவர்த்தன மலையை மழையைத் தடுக்க இடுகின்ற குடையாகப் பிடித்துக் கொண்டு, ஆ(பசு)க் களைப் பிரிந்து வேறாக வாராதவர்களாகிய இடையர் குலப் புதல்வ்னே! வடமலை முதல் வனே காவேரி நடுவிலே கூட்டமாகிய படங்களையுடைய அரவின் மேல் துயின்ற புனிதனே!

இளமை அமைந்த அழகனே! என அழைக்கின்ற கோதையே! தாலோ தாலேவோ! -

கடலில் எழும் அமுதம் பெற்ற புதல்வியே!

மணம்மிக்க துளபம் அருளிய புதுவை நகரில் பிறந்த முதல்வி என வளர்கின்ற தாயே! தாலோ தாலேலோ!