பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் x 101

உச்சியில் முகிலினுரடே ஒளிரும் காட்சி, மின்னல் ஒன்று கொண்டலி டையே எதையோ வரிசையாகத் தேடுவது போன்றிருக்கும்.

அத்தகைய குவளை மலர்கள் மலிந்த புதுவைத் திருமகளே! ஆண்டாளே! கை கொட்டுக!

குயிலைப் பழிக்கின்ற (வென்ற மொழியையுடைய அமுதத் திருமகளே ஆண்டாளே கை கொட்டுக!

முதலைக்கு இடர்உற மதவெற்பு இடர்அற

முற்றவி சைத்துஓடி

முடுகிச் சுடர்விடு திகிரிப் படைதொடும்

முத்தன்ம தித்துஒதும்

மதலைக்கு இடர்இழை வயிரத்து இரணியன்

எற்றும லைத்தூணின்

வரும்.உத் தமமுழு முதலைத் தமதுஉளம்

வைத்ததி றத்தோடும்

திதலைப் பனைமுலை புளகித் திடநடி

சிற்றிடை பெற்றார்மெய்த்

திரம்.உற் றிடமொழி மறையிற் பொருள்உரை

திக்கில்உ றச்சோலைக்

குதலைக் கிளிமொழி புதுவைத் திருமகள்

கொட்டுக சப்பாணி

குயிலைப் பழிமொழி புதுவைத் திருமகள்

கொட்டுக சப்பாணி (49)

யானையின் காலைக் கவ்விய முதலைக்குத் துன்பம் நேரவும், மதமலை போன்ற யானைக்குத் துன்பம் திரவும் முழு விரைவுடன் ஒடி சுடர் விடு, ஆழி (சக்கரப்படையை விரைவாகக் கையாண்ட வீடு பேறளிப்பவன்.

இறைவனைப் புகழ்ந்து பேசிய மகனுக்குத் தீங்கு இழைத்த மிக்க சினம் கொண்ட இரணியன் எற்றிய மலைபோன்ற தூணிலிருந்து ஆளரியா (நரசிம்மமாகத் தோன்றிய மேன்மையான முழுமுதல்வனைத்