பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை த.கோவேந்தன் . 103

சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தரும்பாவை!

சப்பாணி கொட்டிஅரு ளே சததளக் குமுதத்தின் மழலைமென் பாணியாய்!

சப்பாணி கொட்டிஅரு ளே!

[50]

வங்கக் கடல் நீரை அடக்கிய உள்ளங்கையையுடைய மலய மலை யில் அகத்திய முனிவன் அருளிய இலக்கணங்கட்கு எல்லாம் அடிப்படை யாகத் தோற்றிய அகத்தியம் என்னும் நூலின் மரபில் தருகின்ற தன்மை யைப் பெற்றது திருவாய்மொழி. அது முதன்மையான பழச்சாறு போன் றது. முற்பாணி (முதல்வேதம்) என்றைக்கும் அழியாது வழங்கி வருவது. சாம வேதத்தின் நடையைச் சார்ந்த உறுப்புகளை உடையது. ஒருவர், இரு பொருள்படும் சொல்வாய் மாற்றி எழுத இயலாதது. ஒரு தன்மையாக அணி பெறும்படி மொழிந் தருளியது. மறை பொருளை துட்பமாக ஆரா ய்ந்து முடிவு கண்ட அருளுடைய சடகோபர் பாமாலை அது.

அப் பாமாலையைப் பெற்று, எங்களுக்கு அமைந்த இரு கைகளால் வணக்கம் செய்யும்படி, இருபிரிவாக விலகிய காவிரி நீரால், இணைந்த மாலை பெற்றுள்ள அரங்கர் இன்புறும்படி பூமாலை சூடிக் கொடுத் தாய்! அதுமட்டுமா! டாமாலை எனச் சங்கத் தமிழ்ப் பாடலும் பாடித் தந்த பாவையே! ஆண்டாளே! கைகளைக் கொட்டி விளையாடு!

நூற்றிதழ்க் குமுதத்தினின்று ஒழுகும் தேன்போன்ற மழலை மென் சொல்லினாய்! கோதையே! கைகளைக் கொட்டி விளையாடு!

முப்பாணி முற்றிய வளாகத்து மாவலி முனம்சென்று வாமனம தாய்

மூவடி நிலம்தரு கெனப்புகர் தடுப்பவும் முயற்சியில் பெய்தவண் மைக்

கைப்பாணி யைக்கொண்டு மூதண்டம் அளவிடு

கழல்யாணி தன்னை சன்

கட்டழகு உடைத்தலைப் பாணி.என வைப்பித்த

கண்ணன்வின் மிசைவிரசை யாம்