பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஆேண்டாள் பிள்ளைத்தமிழ்

அப்பானி யைக்கடந்து உம்பராய் நிலைபெற்ற

அந்தாம முதல்வன்மேல் நாள்

ஆடகன் உரம்கிழித் திட்டஅல் வியம்நடத்து

அப்பாணி எய்தஅடி யேம்

சப்பாணி கொட்டும்அப் படிதொடி தழங்கநீ

சப்பாணி கொட்டிஅரு ளே சங்கத் தமிழ்ப் பாடல் பாடித் தரும்கோதை!

சப்பாணி கொட்டி,அா ளே!

டி.அரு (51)

முக்கடல் முற்றுகையிட்டதுபோல் சூழ்ந்த நிலப் பரப்பிலே மாவலியின்முன்பு சென்று, வாமன வடிவாகி மூவடி நிலம் தருக என்றான் திருமால். அப்போது தாராதே! என்று மாவலியை அவன் அமைச்சன் வெள்ளி தடுத்தான்். - -

அதை மாவலி பொருட்படுத்தவில்லை. தன் விருப்பப்படி நீர் வார்த்துப் பெய்த வள்ளன்மைக்கு அடையாளமான மாவலியின் கையிலிருந்து ஒழுகிய நீரினால் மகிழ்ந்தான்். அந்த மகிழ்வு உள்ளடங் காமல் அவன் உருவம் வானளாவ உயர்ந்தது. அந்த உருவம் கொண்டு பேருவகை அளவிட்டான். அளவிட்ட திருவடிகளை நான்முகன் விளக் கினான். விளக்கிய திருமாலின் அடி நீரைச் சிவன் கட்டழகுடைய தலைப்பாணி (தலைநீர்) என்னும்படி வைப்பித்தான்் கண்ணன்.

விண் மீது விரசை ஆறாகிய அந்த நீரினைக் கடந்து இவ் உலகத்து முத்தர்கள் தேவர்களாய் நிலை பெறுவது பொன்னுலகம் (பரமபதம்) அதற்குத் தலைவன் கண்ணன். அவன் முற்காலத்தில் இரணியன் மார்பு பிளந்து ஆடிய அல்லியக் கூத்தை ஆடுவதற்காக அடியேம் ஆகிய நாங்கள் இருகை இணைத்துக் கொட்டியது போல, முன்கை வளையல் ஒசையெழுப்பும்படி ஆண்டாளே! நீ கைகளைக் கொட்டி அருள்!

சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தரும் கோதையே! சூடிக் கொடுத்த சுடர் கொடியே கைகளைக் கொட்டி அருள்!

அகரமுதல் னகரஇறு வாய்உயிர்மெய் குற்றுஆய்தம்

ஆதிாறு எனவும்முதல் சார்பு

அக்கரம் அவைக்குஇலக் கணமும்ஒர் ஆறிரண்டு

ஆம்எனவும், ஒலிஎழுத் தால்