பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை- த.கோவேந்தன் k 111

போட்டதி ருக்கைத் தலமுடன் வலதுகை

புணர்தர முறைமுறை கொட்டுக சப்பாணி பூட்டிய சித்ரப் புரிவளை ஒலியொடு

புதுவையுள் மலர்மகள் கொட்டுக சப்பாணி

(57)

கண்கள் எட்டு, எட்டுத் திசைகளிலும் உலகுகளைச் செய்ய விரும் புகின்ற திசைமுகன் (பிரமன்), மூன்றுகண்களையுடைய தேவன் ஆகிய சிவன், அன்றலர்ந்த கமலத்துள் வீற்றுள்ள கலைமகள், மலைமகள் எனும் உமையவளுடன் எல்லோரும் வீடுபேறு பெறுவதற்காக உலகில் கூட்ட լքիT5 வந்து பூசித்துத் த்ருகின்ற நறிய மலருடன் காலை மாலை ஆகிய இரு பொழுதினும் அடியைப் பிடித்து விருப்பத்துடன் ஏத்தி மதிக்கும்படி நூபுர கங்கை பயில்கின்ற இடபமலை என்னும் சோலை மலையில் குடி புக்க வனப்புறும் தோள் அழகனும், வாட்டம் தீரத் தஞ்சமாகப் பற்றுகி ன்ேற முனிவரும், மதி நலம் உறும்படி மிக மேலான குணம் உற்றவர்களும் ஒழுக்கமான வாழ்வு கொண்ட அமரருடன் வந்து திருவடி தொழும்படி திருவேங்கட மலையில் உறைகின்ற அப்பனும், உண்மையாக உன்மேல் போட்ட திருக்கைத் தலமுடன் உன் வலதுகை பொருந்தும்படி வைத்துக் கைகளைக் கொட்டுக!

கையில் அணிந்த அழகிய சங்கு வளையலின் ஒலியொடு- புதுவை யில் வாழும் மலர்மகளே! - கைகளைக் கொட்டுக!