பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 * ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

தேவைப் புகழ்ந்தபழ மறைபராய் அட்டமா

சித்திபயில் முனிவர்பழ கும்

சிகரபூ தரவேரல் உகுமுத்தம் விண்டுவிரி

தீமுத்தம் எனவிரும் பேம்

பாவைத்த தண்தமிழ்க் கும்பமுனி நாவைத்த

பரவைபெறும் இப்பிமுத் தம்

பரியமணல் எறிதரும் பரவர்களின் மிச்சிலாம்

பழுதுடைத்து எனவிரும் பேம்

பூவைத்து ணர்க்குஒத்த மேனிமா தவன்மகன்

பொருகழையின் முத்தம்.அது வும்

புதைபட்ட முத்தம்என்று உட்கொளேம் வெண்ணிலவு

பொழிவதொடு புதைபடா மல்

கோவைப்ப டும்தவள முத்தநிரை உட்கொண்ட

கோவையாய் முத்தம்அரு ளே! கோதையே! மெய்த்திருப் பாவையா டித்தரும்

கோவையாய் மக்கம் ளே!

ாவையாய முததம அரு (60)

திருமாலைப் புகழ்ந்து கூறும் பழைய மறைகளால் போற்றி எண் வகைப்பேறு (சித்திகள் பயின்ற முனிவர் வாழும் மலைமேல் உள்ள மூங் கிலிலிருந்து சிதறிய முத்தம் வெடித்து விரிந்த தீய முத்தம் என்று அதனை விரும்போம்.

பாடல்களைத் தன்பால் வைத்துள்ள தண்ணிய தமிழ் தேர்ந்த அகத்தியர் அங்கையால் அள்ளி நாவில் வைத்த நீர் கொண்ட கடலில் பிறந்த இப்பிதரும் முத்தம் பருத்த மணலில் வீககின்ற மீன் பரவர்களின் எச்சிலாகிய குற்றம் உடையது என்று கருதி அதனை விரும்பமாட்டோம்.

- காயாமலரின் தளிர்க்கு ஒப்பான திறமுடைய திருமேனி கொண்ட மாயோன் மகன் மன்மதன் போரிடுகின்ற கரும்பின் முத்தமும் காதல் விஞ்சியவர்களின் உடல்களில் புதைபட்ட முத்தம் என்று அதனை ஏற்க மாட்டோம்.