பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ல் பொழிப்புரை த. கோவேந்தன்

கிடைக்கும் சிலேடை, யமகம், திரிபு, அணிகள், சொல்கிலம்பல்கள் சுவைக்கக் கிடைக்க மாட்டா என்பது உறுதி.

செய்யுள் நடையில் அமையும் இலக்கியங்களையே நம் முன்னோர் பெரிதும் கையாண்டனர். விரிந்த பொருள்களைச் சுருங்கிய சொற்களில் அடக்கி வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பொருள் புலப்படுமாறு, ஒசை நயமும் இனிமையும் பயத்தலாலும் கற்பார் நெஞ்சில் நிற்கும் இயல்பாலும் செய்யுள் வழக்குச் சிறப்புற்றது.

இத்தகு காரணங்களால் ஆயிரக் கணக்கில் புற்றிசல்கள் போலச் சிற்றிலக்கியங்கள் தோன்றின. தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

தொண்ணுற்றாறு கோலப் பிரபந்தங்கள் கொண்ட பிரான்

என்று சிவந்தெழுந்த பல்லவன் உலா என்னும் சிற்றிலக்கியம் ஒரு வரையறை செய்தது.

"பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத் தொண்ணுாற்று

ஆறு எனும் தொகை"

என்று சதுரகராதி அறிமுகப்படுத்துகிறது.

தொண்ணுாற்றாறு என்று வரையறுக்கபப்பட்டாலும், இப்போது அவை முழுமையாகக் கிடைப்பதில்லை. பல சிறு நூல்களின் பெயர்கள் மட்டும் பாட்டியல் நூல்களில் உள்ளன. இலக்கியங்கள் காணப்பெறவில்லை.

பாட்டியல் நூல்களில் இடம்பெறாத பல புதுவகை நூல்கள் நடைமுறையில் உள்ளன. செங்கோன் தரைச்செலவு, தகடுர் யாத்திரை, சிலேடை வெண்பா, காவடிச் சிந்து, வளையல் சிந்து, ஏசல் முதலியவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். வசைப்பதம், சந்திர விலாசம், சமுத்திர விலாசம் முதலியனவும் புதுவதாகப் புனையப்பட்டன.

சிற்றிலக்கியங்கள் பெற்ற செல்வாக்கைச் சயங்கொண்டார் தம் கலிங்கத்துப் பரணியில்,

"கலையினொடும் கவிவாணர் கவியினொடும்

இசையினொடும் காதல் மாதர் முலையினொடும் மனுநீதி முறையினொடும்

மறையினொடும் பொழுது போக்கி",

என விளக்கியுள்ளார். அரசர்கள் கலை, கவி, இசை, நீதி முறை மறைநூல்களோடும் பொழுதுபோக்கினர் என்கின்றார்.