பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் * 124

குண்டலம் அணிந்த திருமுகத் திருமகள் அனைத்து இறுக்கிய மெல்லிய கையை நழுவ விட்டான் திருமால், குங்குமச் செந்நிறத்தில் மூழ் கிய இளமுலைகளையும் குழைகின்ற மார்பினையும் நெகிழவிட்டு யானை யைக் காக்க விரைந்தான்்.

அப்போது அழகிய குழற்கற்றையில் அணிந்திருந்த கற்பகத்தின் மணமாலை பிடரில் அவிழ்ந்து தழுவியது. பொன்னாடை அவிழ்ந்தது. அவ்வாறே சென்று அந்த யானைக்கு உதவிய கருணையன் அவன்.

அவன் அடியார்கள் மகிழும் பொருட்டு, முகில்கள் தங்குகின்ற சண்பகச் சோலையின் வளம் மிக்க மல்லி நாட்டவளே! நீ வந்தருள்க!

வில்லிபுத்துரர் வடபெருங் கோயிலுள் கண்வளரும் ஆலிலைப் பண்ணியான் ஆகிய இளமையுடைய களிற்றினை அணைவதற்காகவே வளரும் இளம்பிடியே ஆண்டாளே! வந்தருளுக!

பட்டுஅறா இளமுலைப் பாவைமார் காலையில்

பரிமளப் புனல்படிய வெண்

பட்டினை அகற்றஇள முலைகண்டு நாணியே

பங்கேரு கங்கல்முகு ளக்

கட்டுஅறா உக்கதெண் ணறவுதண் புனல்உறக்

கயல்உண்டு பாயஅய லே கண்டுவா ளைப்பகடும் உண்டுகா வினில்மண்டு

காலையில் காமர்பல வின் -

தெட்டவா சக்கனியின் இனியசுளை புனல்உறச்

சினைவரால் உண்டுபா யச்

சினைவரால் என்பதால் அந்தவண் சினை இறால்

சிந்தவே திசைகள்தோறும்

மட்டுஅறாது ஒழுகுசெண்பகமலர்ச் சோலைசூழ்

மல்லிநாட் டவள்வருக வே! வடபெருங் கோயிலுள் கடவுள்மழ களிறுஅனைய

வளர்.இளம் பிடிவருக வே!

(59)

பட்டுடை நீங்காத இளமுலைகளையுடைய மகளிர், காலையில் மணமூட்டிய நீராடிடத், தங்கள் முலை மறைத்த வெண்பட்டினை அவிழ்ப்பர். அப்போது அவர்களின் முலைகளின் திரட்சி கண்டு, நாம்