பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125大 பொழிப்புரை - த கோவேந்தன்

இம் முலைகளுக்கு ஒப்பாக வில்லையே என்று நாணமடைந்து, தாமரை மொட்டுகள் கட்டவிழ்ந்து தேன் கொட்டும். அந்தத் தேன், குளிர் நீரில் கலக்கும். அத் தேனைக் கயல்மீன் உண்டு (வெறி கொண்டு) பாயும்.

பக்கத்தில் கயல்மீன் பாய்வதைக் கண்டு வாளைப்பகடு (ஆனும்) அத் தேனை உண்டு, சோலையில் திரளும் அப்போது அழகிய பலாமர த்தின் மணமுள்ள பழத்தின் இனிய சுளைகள் நீரில் விழும். பலாச் சுவை கலந்த தேனைச் சினை கொண்ட வரால் மீன் கண்டு (வெறி கொண்டு) பாயும்

அந்தச் சினை வராலானது, சினவரால் ஆதலால் மேலே மோதும், பலாமரத்தின் வளவிய கிளையில் தொங்கிய தேன்கூடு தேன் சிந்தும் அதனால் திசைகள் தோறும் தேன் குறையாமல் வெள்ளம் பெருகும். அத் தகைய பெருமையுடைய செண்பகமலர்ச் சோலைகள் சூழ்ந்த மல்லி நாட்டவளே! வருகவே வடபெருங் கோயிலுட் கடவுள் மழகளிறு அனைய வளர் இளம் பிடியே வருகவே! வண்டமிழ்ச் செல்வியே வருகவே!

காமர்மர கதமணிச் சுடர்படர் முருந்துடைக்

கலபமா மஞ்ஞைதன தாம்

கழுத்தினும் விழுத்தகவு அடைந்தநின் சாயலைக்

கண்டுபிணி முகம் எய்த லால்

நாமமும் பிணிமுகம் எனப்பெற்று முருகனை

நயந்துநின் சாயல்பெறு வான்

நாளும் சுமக்கின்றது. அஞ்சுகமும் மழலைக்கு

நாணிநின் மழலைபெறு வான்

ஏம் அறச் சுகம்இழந்து இரதிபதி யைச்சுமக் கின்றது.உன் நடையின்ஒவ் வாது

எகினம்நான் முகனைச்சு மக்கின்றது. அந்தநடை

எமதுகண் கண்டுஉவப் பான்

வாமமே கல்ைமருங் குல்களய முகுளமுலை

மல்லிநாட் டவள்வருக வே!

வடபெருங் கோயிலுள் கடவுள்மழ களிறுஅணைய

வளர்.இளம் பிடி! வருகவே! (70)