பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 * பொழிப்புரை - த கோவேந்தன்

வண்டு இரைத்து எழுதுழாய் மணமல்கு புதுவைமலர்

மகல்!அம்மம் உணவருக வே!

வாடவா டப்பரிம எரிக்குமகிழ் மாறர்திரு

மகள்!அம்மம் உணவருக வே! (71)

இளம்பிறை போன்ற நெற்றியுடைய ஆயர் மகளிரின் வீடுதோறும் வெண்ணெய், பால்முதலியன திருடி உண்டான் கண்ணன். அதைக் கண்ட ஆய்ச்சியர் அவனைப் பிடித்துக் கட்டிட தயிர்கடையும் கயிறு கொண்டு பின் தொடர்வர்.

வாயிலிலும் சுற்றுப் புறங்களிலும் பின் தொடர்ந்து, திருடி உண்ட கள்வனே வருக! வருக! என்பர்.

அவர்கள் கண்ணில் படாமல் கண்ணன் ஒளித்துக் கொள்வான். யசோதை கட்டிய பொன் தொட்டிலில் அறிதுயில் செய்து கொண்டி ருப்பான் கண்ணன், அது கண்ட ஆய்ச்சியர் யசோதையிடம் வந்து அவன் திருடியதை உணர்த்துவர்.

அப்போது அழகிய வாசலில் கண்ணன் வயிறு தளர்கின்ற பசி பெறாதவனாய்த் தவழ்ந்து வருவான். வந்து தாயிடம் முலைப்பால் அருந்துபவன் போல், பொற்கிண்கிணி ஒலிக்கவும் சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு வடிவாகிய இடையணி மணிவடம் ஒலிக்கவும், தாலாட்டுப் பாடுகின்ற தாயின் வாய் ஒலிக்கவும் கண்டு, ஆய்ச்சியர் நம் வீட்டில் திருடியவன் இங்குத் தன் தாயிடம் பால் உண்டு தொட்டிலில் இருக்கின் றானே! என்று வியப்புடன் மீளுவர்.

இத்தகைய திருவிளையாடல் புரியும், கண்ணன் குடி கொண்ட ஊர் புத்துரர் வண்டுகள் இரைச்சலிட்டு எழுகின்ற துழாயின் மணம் நிரம்பிய புதுவை மலர்மகளாகிய ஆண்டாளே! அம்மம் உண்ண வருக! வருக! வாட்டமடையுந்தோறும் நறுமணம் மிகுகின்ற மகிழமலர் மாலை அணிந்த நம்மாழ்வார் திருமகளே அம்மம் உண்ண வருக!

முடக்குவச் சிரவைத் துதித்தோட்டி உழுசுவடு

முதிர்மத்த கத்துஒடை மா மூதண்ட மழைமுகிற் படலத்து இடிக்குல முழக்குஎன உழக்கிஎதிர் வந்து உடக்கிய தடக்கையை இடக்கையின் துடக்கிமற்

றொருகையால் கிம்புரிக் கோடு ஒன்றைப் பிடுங்கிஅது கதையாக எதிர்தண்டும்

ஒருமருப் பையும்ஒடித் தே