பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 128

சடக்கெனா ஒடித்திடா அதன் உயிர் குடித்துவஞ்

சனைநீடு கஞ்சன்முடி யைத்

தாளால் தைத்துவன் தலைஉருட் டிப்பந்

தடித்திட்டு வாளரா வின்

படத்திடை நடித்துவட மலைவாணர் களிதரப்

பந்தடித் திடவருகவே!

பழமறைப் புதுவை அந் தணர்பிரான் அருள்புதல்வி

பந்தடித் திடவருகவே! (72) to

வளைந்த வலிய கூரிய துனியுடையது அங்குசம், அது குத்திய தழும்பையுடைய மத்தகமும் முகபடாமும் கொண்டது குவலயா பீடம் என்னும் யானை, முதுபெரும் வானத்து மழை பெய்யும் முகிற் கூட்டத் தின் இடிக் குலத்தின் முழக்கமெனக் கண்டவரை அழித்துக் கொண்டு எதிரே வந்தது. அவ்வாறு வந்த யானை, கொல்வதற்காக நீட்டிய துதிக் கையை கண்ணன் இடக் கையால் துவளச் செய்தான்். மற்றைக் கையால் கஞ்சன் ஏவிய அந்த யானையின் பூண் இட்ட கொம்பு ஒன்றைப் பறித் தான்். அதையே தண்டுப் படையாகதாயுதமாகக் கொண்டு, மேலும் எதிர்த்த அந்த யானையின் மற்றொரு தந்தத்தையும் ஒடித்தான்். இப்படி அதன் உயிர் குடித் தான்். கொன்ற பின்பு வஞ்சனை மிக்க கம்சன் முடியை அடியால் உதைத்தான்். அவனது வலியதலையை உருட்டிப் பந்தாடி னான். பின்பு கொடுமையுடைய காளிய நாகத்தின் படத்திலே நடித்தான்்.

அந்த வடமலை வாணன் மகிழுமாறு பந்தடித்து விளையாட வருக!

பண்டைய மறைகள் அனைத்தும் உணர்ந்த புதுவை அந்தணர் ஆகிய பெரியாழ்வார் அருளிய புதல்வியே பந்தடித்து விளையாட வருக!

நிலைத்தா ருவின்கீழ் இருந்து அரசு

நிகழ்த்தும் அயிரா வதக்கட வுள் ஞானா கரராம் அமரரொரு

நெடியோய்! அடியோம் நிழல்மகுடத்

தலைக்கா வலதாய் உலகளந்த

தாள்தா மரையாய்! அபயம்! எனச் சரணா கதியின் தாசரதி

தான்்என்று அளக்கர் தடுத்து அமரில்