பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் * 12

சிற்றிலக்கிய இன்பம் சிற்றின்பத்துக்கு ஒப்பாகக் கருதப்பட்டது என்பது இப் பாடலால் அறிகின்றோம்.

இத்தகைய சிற்றிலக்கியங்களில் பிள்ளைத் தமிழ், உலா, கோவை, தூது, கலம்பகம், அந்தாதி முதலியனவே பேராதிக்ககம் பெற்றன. தொன்னுரல் முதலாவதாகக் குறிப்பிட்ட பிள்ளைத் தமிழ் நூல்கள் மட்டும் பல நூறு தமிழில் உள்ளன. அழிந்தன அளவில்லனவாக இருக்கலாம்.

பிள்ளைத் தமிழ்தான்் சிற்றிலக்கியங்களில் முந்தையது என்றும் கூறலாம். அதனைப் பற்றிய குறிப்பு, "குழவி மருங்கினும் கிழவதாகும்" என்ற தொல்காப்பிய நூற்பாவும் அதன் உரையும் இதனை உறுதிப்படுத்தும்.

"தந்தையர் இடத்தன்றி ஒரு திங்களில் குழவியைப் பற்றிக் கடவுள் காக்க என்று கூறுதலும் பாராட்டுமிடத்துச் செங்கீரையும் தாலும் சப்பாணியும் சிறுதேரும் சிறுபறையும் எனப் பெயரிட்டு வழங்குதலு என்பது"

என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தருதலும் நோக்கத்தக்கது.

முகில்நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள் பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி வருகுவை யாயின் தருகுவன் பால் என விளங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றும்

என்ற பகுதி அகநானூற்றில் வருகின்றது.இதுவும் பிள்ளைத் தமிழின் முன்னோடி எனலாம்.

ஆழ்வார்களில் நெடுவாசி பெற்றவராகிய பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக்கிப் பாடிய பாடல் வகைகள்,

1. கண்ணன் பிறப்பு 10. பூச்சி காட்டுதல் 2. பாதாதி கேசம் 1. முலையுண்ணல் 3. தாலாட்டு 12. தாது குத்தல் 4. அம்புலியழைத்தல் 13. நீராட்டம் - * 5. செங்கீரை 14. குழல் வாரக் காக்கையை 6. சப்பாணி அழைத்தல் * 4. 7. தளர்நடை 15. கோல் கொணரக் கூறுதல் 8. அச்சோ 16. பூச் சூட்டல்

9. புறம் புல்கல் 17. காப்பிடல்