பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129女 பொழிப்புரை - த கோவேந்தன்

சிலைக்கால் வளைத்த துடன்புருவச்

சிலைக்கால் வளைத்துச் சரமாரி

சிதறிச் சிரம்பத் தினன் உயிரைச்

செகுத்துச் சிறைமீட்டு அயோத்திபுகுந்து

அலைாக்கா விரியுள் துயில் அரங்கர்க்கு

அமுதே வருக! வருகவே! அழகர்க்கு அமுதே வடமலை ழ

அனகர்க்கு அமுதே வருகவே! ; (73} .

என்றும் அழியாமல் நிலைபெற்ற கற்பகத் தருவின் கீழே இருந்து அரசு செய்யும் வெள்ளை ஐராவத யானையுடையவன் இந்திரன். அவன் குடைக் கீழ் வாழ்பவர் அறிவே வடிவான தேவர்கள். அவர்களோடு வந்து அடியோங்களாகிய எங்களுக்கு ஒளி கொண்ட பொன்முடி அணிந்த தலையையுடைய காவலனே தாவி உலகளந்த அடித் தாமரை உடைய வனே! நெடியோனே! யாம் உனக்கு அடைக்கலம் என்று தேவர் வேண்டியபோது, மண்ணில் தசரதன் மகனாகத் திருமால் பிறந்தான்்.

அடைக்கலம் தருகில் சிறந்தவன் தசரத இராமன் தான்் என்று நிலை நாட்டுவதற்காகக் கடலை அணை கட்டித் தடுத்து, போரிலே கோதண்ட வில்லின் துனியையும் வளைத்தான்். அம்பு மழை சிதறி, தவை பத்துள்ள இராவணன் உடலைக் கொன்று சீதையைச் சிறை மீட்டான். பின்னர் அயோத்தியில் வந்து முடி குடி, காவிரி நதியுள் அறிதுயில் கொண்டு அலைகளையுடைய அரங்கன் எனப் பெயர் பெற்றான். அவனுக்கு அமுதே வருக வருக!

சோலைமலை அழகர்க்கும் அமுதே' வடமலை வாழ் அனகர்க்கும் அமுதே ஆண்டாளே! வருக வருக!

கயலை வடுவொடு கடுவை மதன் அடு

கணையை மருள்புரி பிணையையே

கருது மதர்விழி விபுதர் அரிவையர் களியின் அடிதொழ வருகவே!

அயனும் அயன்வழி முனிவர் அனைவரும்

அமரர் குடிபுகு பதவிஆள்

பவனும் நிலமிசை பொழியும் நறுமலர் அணையின் அழகுடன் வருகவே!