பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 女132

பருமா மணியை வேகடம்செய்

பவர்வே கட்ம்செய்து அமைவடிவில் பணிக்கே வனத்துள் பொன்தகட்டில்

பருதி எனலாம் முழுத்தகுணத்து

அருமா மணியும் இணைதோற்பது

ஆகத் தெவிட்டா மருந்துஅ ருந்தும் அமரா பதிகா வலன்பணிநா

யகம்ஒன் றிதெனத் தமிழ்ப்புதுவை

வருமா மணியே பட்டர்பிரான்

மகளே! வருக! வருகவே! வடவேங் கடத்துள் கருமணிக்கண்

மணியே! வருக வருகவே! (75)

பெரிய உலகத்திலே உதயகிரியில் தோன்றும் பேராற்றினுள்ளே சேற்றிடத்து அணு அளவினதாய்த் தோன்றி, சிவப்பு நிறமுற்று பதினாறு ஊழிக்காலம் கழித்தபோது, முழுமை பெற்றது ஒருமணி. அது பிற செல்வங்களால் விலை மதிப்பிட இயலாதது. அது மிகப் பருத்தது. அதனை மணிகளைச் சாணை தீட்டுவோர் சாணை தீட்டித் தக்க அளவு செய்து அணிகலனிற் குழி செய்து பதித்தனராயின், பொன்தகட்டில் பதி த்த செங்கதிர் போன்ற முழுமையான தகுதி பெற்ற அரிய மாமணியும் அம்மணிக்கு ஒப்பிட்டால் தோற்றுப் போகும். தெவிட்டாத அமுதம் அருந்தும் இந்திரன் அம்மணியைக் கண்டால், இது, அணிகலன்களில் இதுகாறும் பதிக்கப் பட்ட எம்மணிக்கும் தலையாய மணியாகும் என்று பாராட்டுவான்.

அந்த அருமாமணி போன்றவளே! தமிழ்ப்புதுவையில் தோன்றிய செம் மணியே! பட்டர்பிரான் மகளே! வருக! வருக!

வடவேங்கடத்துள் நின்றிருக்கும் கருமணிக்கும் கண்மணியே! கோதை நாச்சியே ஆண்டாளே! வருக! வருக!

செஞ்சூட்டு வைந்துதிக் கொடுமுள் துணைத்தாள்

சிறைச்சேவல் அம்பதா கைச்

செவ்வேளை யும்கரி முகத்தான்ை யும்பெற்ற

சிவனைப் பயந்ததுட னே