பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135大 பொழிப்புரை - த கோவேந்தன்

மறைகள் தொழுகின்ற தமிழ்ப் புதுவை ஆண்டாளுடன் அம்பு வியே விளையாட வா! .

அரனும் இந்திரனும் எதிரில் வந்து வாய்புதைத்துக் கைகுவித்து நின்று திருவடி வணங்குகின்ற கோதையுடன் - அம்புலியே! நீ விளையாட வா!

சோதிவான் ஆவரணம் ஏழும் தொழப்பவனி

சுற்றிவரு சோதிஇவள். நீ சுடரவன் பதிவிமேல் ஆவரணம் ஒன்றுமே

சுற்றிவரு சோதியா கும்

பாதியா கியமதிச் சோதியாம் மறுவுடன் பகல்மட்கு சோதியினை நீ பரனைஉணர் மறுவற்ற முழுமதச் சோதிஇவள்

பகள் இரவு தழைசுடரி னாள்

நீதியால் எண்ணிரண் டாயகலை உடையை நீ

நிகழ்திருப் பாவையுட னே நீடு திரு மொழிஎனப் பதின்மடங்கு அதன்மெல்

நிறைந்தபன் மூன்றுகலை யாள்,

ஆதி ஆ ரணமறையின் விளையாடும் இவளுடன்

அம்புலி ஆடவா வே! அரனும்இந் திரனும் நின்று அடிதொழும் கோதையும்

அம்புலி ஆடவா வே! (79)

ஒளியுடைய வானத்து மறைப்பு ஆகிய கோட்டைகள் ஏழும் தொழுமாறு பவனியாக உலாவி வரும் பெரொளி இந்த ஆண்டாள்.

நீயோ செம்பருதி பதவிக்கு மேலுள்ள கோட்டையாகிய மறைப்பு (ஆவரணம்) ஒன்றை மட்டும் சுற்றி வரும் ஒளிப்பிழம்பு ஆவாய்!

பாதியாகத் தேய்ந்து போகும் அம்புலி முயற் களங்கத்துடன் பகலில் ஒளிமழுங்கும் ஒளியையுடையாய் நீ!

பரம் பொருளை உணர்கின்ற களங்கமற்ற முற்றறிவுகொண்ட இவள் பகலும் இரவும் வளக்கின்ற சுடர் உடையவள் நீ திகழ்கின்ற திருப்பாவை என்னும் முப்பது கலைகளுடன் நெடிய நாச்சியார் திரு மொழி எனப் பதின்மடங்காக அவற்றின் மேல் நிறைந்த பதின் மூன்று கலையுடையவள் இவள்,