பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 * பொழிப்புரை - த கோவேந்தன்

இவ்வளவு நன்மைகள் பெற வேண்டுமாயின் நிலவே இவளுடன் விளையாடவா ஆடுகின்ற மயில் போலும் சாயலுடைய கோதை இவள் ஆத லால் பாம்பு உன்னைத் தீண்டாது. நிலவே விளையாட வா!

தினசரிதை சிறுபிறை துதல்திரு மண் எழுதத்

திருந்துகண் ணாடிஎன வே செங்கையில் கொண்டமதி ஒன்றுண்டு முகமதி

சிறந்தது ஒன் றுண்டு.உலகு ளோர்

மனதுற மதித்தநித் திலநிழல் குடைஎன்னும் மதிகள் உண்டு இவை அலா தே மதியிலா தவள் அல்ல எண்ணின் ஆ யிரம்என்ற

வதனமதி கொண்டுஉலா வும்

கனகரத் னத்தொடிக் கைத்துனைக் கோபால

கன்னியர்கள் இரவுபக லாய்க் கைகலந்து ஒருகணமும் அகலாத உத்தமக்

கற்புடைய நங்கைஎன் றால்,

அனவரத கலியான புதுவைஆண் டாளுடன் அம்புலி ஆடவா வே! - அரனும்இந் திரனும் நின்று அடிதொழும் கோதையுடன் அம்புலி ஆடவா வே! (B3) நாள் தோறும் சிறிய பிறை நெற்றியில் திருமண் இட்டுக் கொள் வதற்காகத் திருத்தமான கண்ணாடி எனச் செங்கையில் ஏந்திய மதி ஒன்று இவள் பால் உண்டு முகமாகிய மதி என்று சிறந்ததாகிய ஒளி ஒன்றும் உண்டு. உலகத்தார் மனதாரப் புகழ்கின்ற முத்தின் ஒளிபரப்பும் குடை என்னும் மதிகளும் இவள்பால் உண்டு இவைமட்டுமா?

இவள் மதியே இல்லாதவள் அல்லள் எண்ணினாள் ஆயின் ஆயிரம் முகமதி கொண்டு உலாவுகின்ற தோழிகள் இவளுக்கு உண்டு தங்கத்தில் மணி இரத்தினங்கள் பதித்த வளையல் அணிந்த கைகளை யுடைய ஆயர் கன்னியர்கள் இரவும் பகலும் பக்கத்தில் கூடி ஒரு கணமும் அகலாமல் இருப்பர். அந்த ஆய்ச்சியர் முகமதிகளும் பல்லாயிரம் இவளுக்கு உண்டு இவள் மிகச் சிறந்த கற்புடைய நங்கை ஆதலால் எப்போதும் நீங்காத மங்கள முடைய புதுவை ஆண்டாளுடன் நிலவே விளையாட நீ வாஅரனும் இந்திரனும் நின்று அடிதொழும் கோதையுடன் விளையாட நீவா! -