பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் k 140

பாம்புவெண் திரைசுழித்து எழுகடல் தான்ைசூழ்

பாரினில் காடுபதி யாம் பனைமருப்பு இரலையொடுமான்வெருண்டு ஓடவே

படிறு இழைப் பதுவும்.அல் லால்,

கிம்புரிக் கோட்டுப் பனைக்கைக் கடாநதி

கிளைத்து எழும் கரடநால் வாய்க்

கெசேந்திரன் வெருவியே பிடியை இடைஇடமீண்ட

கீற்றுவெண் பிறைஎயிறு கூர்

வெம்புலித் திரள்புறம் காட்டுநர சிங்கத்தை

மெய்புக்கு வென்றமா னாம்

மெல்லியல் மடந்தை ஒரு மான் உன்னை வெறுவாது

மெய்யுற விளக்குதற் கோ

அம்புவிக் கடவுள் எனும் நின்னைவரு கென்றுளாள்.

அம்புவி ஆடவா வே!

அபிராம வண்தமிழ்ப் புதுவைப் பிராட்டியுடன்

அம்புலி ஆடவா வே (84)

துள்ளும் வெள்ளலைகள் சுருண்டு எழுகின்ற கடலை ஆடையா கக் கட்டிய உலகிலே, காட்டை இருப்பிடமாகக் கொண்ட திரண்ட கொம்புகளையுடைய ஆண்மானொடு பெண்மானும் அஞ்சி ஒடுமாறு கொடுமை செய்யும் அரிமா (சிங்கம்),

பூண் அணிந்த தந்தங்களும் திரண்ட துதிக்கையும் மதமாகிய ஆறு கிளைத்து எழுகின்ற சுவடும், தொங்குகின்ற வாயும் உடைய யானை, அரசன் அஞ்சி தன் பிடியை இடைவழியில் கைவிட்டு மீளவும் பிளவு பட்ட வெள்ளிய பிறை போன்ற பற்கள் கொண்ட வெவ்விய புலிக் கூட்டம் தோற்றுப் புறம் காட்டவும் வைக்கும் ஆளரி (நரசிங்க) தோற்றச் செம்மலை உடலினுள் புகுந்து வென்ற மான் ஆகிய மெல்லியல் மடந்தை

அம்புலிக் கடவுள் எனும் உன்னை வருக! என்றுள்ளாள். அதற்குக் காரணம், களங்கமாகிய மான் அரிமாவைக் கண்டு அஞ்சாமலிருக்கும் படி அதற்கு அறிவுரை கூறுவதற்காக் ஒருகால் இருக்கலாம். ஆதலால் நிலவே விளையாட நீ வா! அழகிய வளவிய தமிழ்வழங்கும் புதுவைப் பிராட்டியுடன் நிலவே நீ விளையாட வா.