பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சிற்றில் பருவம்

ஆதார மேருழ தரம்நள்ளி டைத்துரணம்.

அருவரைகள் எண்திசைக் கால் அகமனை.இ ளாவிரத கண்டம் மணி மண்டபம்,

அதுநினது கொலுமண்ட பம்

சூதான்ம் உற்றபுற மனைகள் ஏழ் அலையழி

சுற்றும் எழு தீவுநாளும் சுகமேவும் ஏமழ தளநிலா முற்றம்எயில் சுடர் தூண்டு நேமிவரை யாப்

யூதாதி வழிவந்த அண்டபித் தியுமாப்

பெரும்புறக் கடல் அகழி யாப் பொன்னுலக முதலைந்தும் உப்பரிக் கையதாப்

புரந்தபெண் அரசியுே, மென்

சீதார விந்தமலர் வளவயற் புதுவையுள்

சிற்றிலை இழைத்தருள்க வே! தென்அரங் கேசன்முதல் ஐவரும் குடிபுகச்

சிற்றிலை இழைத்தருள்க வே! (85}

உலகத்துக்குப் பிடிப்பு ஆகிய மேருமலை நடுவில் நாட்டிய துரண் (அட்ட வரைகள்) எட்டுமலைகள், எட்டுத் திசைகளின் கால்கள் உன்வீடு ஒன்பது கண்டங்களுள் ஒன்றாகிய இளாவிரத கண்டம் ஆகிய மணி மண்ட்பம் உன் கொலுமண்டபம்

பாதுகாப்புப் பொருந்திய நின் புறவீடுகள் அலைகடல் ஏழும் சுற்றிய ஏழு தீவுகள் என்றும் இன்பம் தரும் பொன்னுலகம் நின் நிலாமுற்றம் மதில்கள் இருசுடர் தோன்றும் வளைய (சக்கர)வாளமலை யாகவும், பூதம் முதலியவற்றின் வழியிலே வந்த அண்டம் சுவர்களாகவும் பெரும்புறக் கடலானது அகழியாகவும், பொன்னுலகம் முதலான ஐந்து உலகங்களும் உப்பரிகையாகவும் கொண்டு அரசு செய்த பெண் அரசியே! குளிர்ந்த தாமரை மலர் பூத்த வளவிய வயல்'சூழ்ந்த புதுவையுள் சிற்றி லைக் கட்டி யருள்க! தென்னரங்கேசன் முதலிய ஐவரும் குடி புகுவதற்காகச் சிறு வீடு கட்டி ஆடுக.