பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 144

மின்னல் இடைக்குச் சுமையாகித் துன்பம் செய்வதற்க வளர்கின்ற நகில்களையுடைய பெண் அரசியே! தென்னாங்கன் முதல் ஐவரும் குடிபுகச் சிற்றலைக் கட்டி விளையாடு:

புற்புதம் ஒத்தநி லைப்பிசி தக்குடில் பொற்பன செய்திடும் இப்

பூத விகாரப் புறநிலை உள்நிலை

புகலுகில் நீ அலைகாண்!

அற்புத வாயில் இழைத்திடு நுண்ணுரல்

அதனிடை நின்று வியாத்தியின்

அதுசென்று உற்ற சிலம்பி வியாத்தியின்

அனுமய மாய் இதயத்து

உற்று உணர் வொடுசுடர் மயமாய் இரவியொடு

உறுசுடர் என இறையோன்

உணர்வுடன் இறைநிலை உயிர்நிலை உடல்நிலை

உணர்வது நீஎனவே

தெர்றென முற்ற உணர்த்துநர் வாழ்வே!

சிற்றில் இழைத்தருளே .

செய்ப்புது வைப்பதி யுள்பயில் உத்தமி

சிற்றில் இழைத் தருளே! (88)

நீர்க்குமிழியைப் போன்ற நிலையினதாகிய ஊனுடவாகிய குடிலை அழகுடையனவாகப் படைக்கின்ற பூதங்களின் கலப்புகளாகியன. புறநிலை அகநிலைகள். அதாவது பரு உடல்களும் துண் உடல்களும் சொல்லப் போனால், ஆண்டாளே, நீ அவை அல்லாதவள். பஞ்ச பூதத் தொடர்பில்லாத இயற்கையைவிஞ்சிய திருமேனியுடையவள்.

வியப்பூட்டும்படித் தன் வாயால் இழைத்திடும் துண்ணிய நூலினின்று விலகி, அயலே நின்று மீண்டும் அந் நூலைத் தன்னுள் அடக்கும் சிலம்பியைப் போல இறைவன் (வியாத்தியில்) எங்கும் பரவிய நிலையில் அனுமயமாகி நெஞ்சு தோறும் பொருந்துவான். உணர்வுமய மாயும் ஒலிமயமாயும் இரவியொடு சுடர்கள் எனவும் இருப்பான் அவன்.

அறிவுமயமாகிய அந்த இறைவன் நிலையையும் உயிரின் லையையும் அசித்தாகிய உடலின் நிலையையும் நன்கு உணர்ந்து

այ Ակ கு இது