பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சிறுசோற்றுப் பருவம்

ஊன் அறாச் சுடர்முத் தலைச்சூல பாணிதொட்டு

உண்டதுஈங்கு ஒருவர்உண் ணார்

உகம் உண்டு போம்என்பது அகமுறக் கண்டுவீடு

உதவுவான் அன்றுநிற் கும்

தான்மும் சுடுகாடு தாமம்என்பு ஊன்உடைத் தலையில் இடு பலியைஉண் பான்

தள்ளையெப் பிள்ளையை அறுத்திடு சமைத்திடச்

சலியாய்கொல் என்றுதுய்ப் பான்

ஆனதால் அவனைவிட்டு இங்குவந்து அன்னைநீ

அமலனுக்கு ஊட்டிஉண் னும்

அச்சேடம் உண்பதே உசிதம்என்று அயனைமுதல்

அவர்கள்.எதிர் கொண்டுநின் றார்

தேனறாச் சோலைசூழ் புதுவைப்பி ர்ாட்டியே!

சிறுசோறு இழைத்துஅருள்க வே! தென்னரங் கேசன்முதல் ஐவரும் விருந்துணச்

சிறுசோறு இழைத்துஅருள்க வே! (90)

பகைவர் உடலைக் குத்தியதால் ஊன்ஒட்டி நீங்காது இருக்கும் ஒளியுடைய மூன்று துணிகளையுடைய முத்தலை (சூலாயுதம்) ஏந்தியதால் குலபாணி எனப்பெயர். சிவன் உண்டது நஞ்சு அதை வேறு யாரும் உண்ண மாட்டார்கள்.

ஊழிநீர் உண்டு உலகம் அழிந்து போகும் என்பது மனதாரத் தெரிந்தும் உயிர்களுக்கு வீட்டின்பம் தர இயலாதவன் அவன். அவன் வாழும் இடம் சுடுகாடு மாலையோ எலும்பு ஊன் உடைய மண்டையில் இடும் பிச்சையை உண்பான். தாயினிடம் சென்று உன் பிள்ளையை அறுத்துத் தா! பொரித்துத் தா என்று கூசாமல் கேட்டு உண்பான். ஆதலால், - நான் முகன் முதலான தேவர்கள் அவனிடம் விருந்துண்ணச் செல்வதை விட்டார்கள்.

அன்னையே நீதிருமாலுக்குப் படையலிட்டு ஊட்டி உண்கின்ற மிஞ்சிய உணவு (சேடம்) உண்பதே தகுதி என்று உன்னை எதிர் கொண்டு நிற்கின்றார்கள். தேன் வற்றாத சோலைகள் சூழ்ந்த புதுவைப் பிராட்டியே!