பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் 14

பிள்ளைத் தமிழின் இலக்கியக் கூறுகள் அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை,கலித்தொகை முதலிய சங்க நூல்களில் தம்மை

அறிமுகப்படுத்திக் கொள்கின்றன.

சிலப்பதிகாரம் ஊசல், அம்மானை என்றும், சீவக சிந்தாமணி பந்தாட்டம் என்றும் பிள்ளைத் தமிழ்க் கூறுகளைத் தம்முள் இடம் பெறச் செய்துள்ளன. சைவப் பெரியார்களும் பிள்ளைத் தமிழ் விதை தட்டுப் பாடல் நீர் ஊற்றி வளர்த்துள்ளனர்.

பதினோராம் திருமுறையில் அதிராவடிகள் சப்பாணி, செங்கீரை, ஊசல் என்ற பருவங்களைத் தம் பாடல்களில் ஒளிபெறச் செய்துள்ளார்.

இராமயணத் திருப்பகம் பாடிய வால பாரதியார்,

எந்தை வருக, ரகுநாயக வருக! மைந்த வருக, மகனே இனிவருக! என் கண் வருக, எனதாருயிர் வருக! அபிராமி இங்கு வருக, அரசே வருக! முலை உண்க, வருக, மலர்சூடிட வருக! என்று பரிவினொடுகோ சலபுகல வருமாயன்

என்று பாடி பிள்ளைத் தமிழுக்கு வழித்தடம் அமைத்துள்ளார்.

பெரியபுராணத்தும் பரவையார், மானக்கஞ்ச7றர் மகள், புனிதவதியார், பூம்பாவை ஆகியோரின் இளமையைக் கூறும்போது, பிள்ளைப் பருவ நலங்கள் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு படிப்படியாகத் தளர்நடையிட்டு வளர்ந்த பிள்ளைத் தமிழ், இலக்கண அரியணை ஏறிச் செங்கோல் கைக் கொண்டது.

பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பாடி அருளிய சிவஞான முனிவர் சரித்திரச் சிறு காப்பியத்தில் வருவத்துக்கு ஒன்றுவிதம் பிள்ளைத் தமிழ் ஒன்று இயற்றியுள்ளார்.

அண்மையில் தோன்றிப் பல பெரும் பரிசுகள் பெற்றுப் பல்கலைக் கழகப் பாடங்களாகவும் தமிழ்ப் பாடநூல் நிறுவனத்தின் பத்தாம் வகுப்பில் பாடமாகவும் இடம்பெற்றுவரும் காந்திகாதை என்ற பெருங்காப்பியத்திலும் காந்தியடிகளைப் பற்றிப் பருவத்துக்கொன்றாக அமைந்த பத்துப் பாடல்களால் ஆகிய பிள்ளைத்தமிழ் இடம் பெற்றுள்ளது.