பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 k பொழிப்புரை - த கோவேந்தன்

சிறுசோறு சமைத்து விளையாடு தேவர்கள் அரிய அமுதம் உண்னும் படி மணம் மகிழ்ந்து அருள் ஆண்டாளே சிறுசோறு சமைத்து விளையாடு!

ஆறு இழைத்து அறல்புக்க கடல் இழைப் பதன்முன்னம்

அங்கங்கு இழைத்தபுவ னத் தார் இழைத் தனர் என்னும் உயிர்களுக்கு உறையுளாம்

அவைநின்று இறங்குவன வாய்

வேறு இழைத்து அறிவுஒன்று முதல் ஆறு இழைத்து உபய

வினை இழைத் துளமுதன்மை யால்

மேதக இழைத்த உகம் எழுகோடி யின் வயது

மிக்க இரு பஃது இலக்க

நூறு இழைத்து அவைஇறத் தலும் உயிர்கள் உடல் இன்றி

நோக இழைத்ததனை யே

நோக்கி உத ரத்துள்வைத்து இன்பமது இழைத்துளான்

நோக்கமது இழைத்தகள பச்

சேறு.இழைத்து ஒழுகுமுகிழ் முலைமலர்க் கோதையே!

சிறு சோறு இழைத்தருள்க வே! தேவர் ஆரமுது உண்ண உளமகிழ்ந் தருள்கோதை

சிறுசோறு இழைத் தரள்க வே! (94) ; ஆறு உண்டாகிக் கருமணல் புகுந்த கடல் உண்டானது. அதற்கு முன்பே ஆங்காங்கே உண்டாகிய உலகத்தார் செயல் படத் தொடங்கினர் உயிர்களுக்குப் புகலிடமாகிய (அலை) உடல்களில் நிலை பெற்றும் இறப்பனவாயயும் இருக்க வேறாகச் செய்தான்், ஒர் அறிவு முதலாக ஆறறிவு வர பெற்ற உயிர்களைப் படைத்தான்் நல்வினை தீ வினை களாகிய (உபய) இருவினைகள் ஆற்றும் உரிமை தந்தான்் ஏழு கோடி (யுகங்க) களில் அகவை மிக்க இருபது ஆயிரம் நூறாயிரம் என அழைத்தான்். அக்காலம் கழிந்ததும் உயிர்கள் உடல் இழந்து தவிக்க கண்ட அவற்றை நோக்கி இரக்கப்பட்டுத் தன் வயிற்றினுள் அதனை வைத்து இன்பம் கொடுத் தான்்திருமால் அவன் கடைக்கண்நோக்கம்பட்ட சந்தனக்குழம்பு பூசிஒழுகு கின்ற மலர் மொட்டுப்போன்றநகில் மலர்களையுடய கோதையே சி|றுசோறு சமைத்து விளையாடு!

தேவர்கள் ஆரமுது உள்ள உளமகிழ்ந்து அருள் கோதையே! சிறுசோறு சமைத்து விளையாடு!