பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பொன்னூசல் பருவம்

அன்னம் தடந்தாம ரைப்போதி னைக்கொணர்ந்து

அளியமென் பேடையோ டும்

ஆடகப் பூஞ்சோலை யுள்குடம் பையைஅமைத்து

அகலாத சோலைமலை வாழ்

மன்னன் தனக்குநீ வாய்நேர்த்தி டப்பொன்னி வளைகோயில் அண்ணன்அன் பால்

வாழ்விக்கு மாறர்திரு மகளாய உரிமைக்கும்

வரிசைஇது எனமதித் தே

இன்அன் புறப்புதிய வெண்ணெயொடு தேன்நிறைத்து

இருநூறொடு ஒருநூற தாய்

இனியதெள் அமுதென்ன அக்கார அடிசிலும்

இயற்றவே தைத்திங்கள் வாய்

பொன்னின் தடாநிறைத் தருளும்இன் அமுதமே!

பொன்ஊசல் ஆடியரு ளே! புதுவைமா நகர்மன்னர் வதுவைக்கு அமைந்துளாய்!

-> *" | பொன்ஊசல் ஆடியரு ளே (98) அன்னச் சேவல் ஒன்று அகலமான தாமரை மலரைக் கொணர்ந் தது. அன்புள்ள தன் பேடையோடு கூடி, பொன் போன்ற பூக்கள் நிரம்பிய சோலையினுள் ஒரு மரக்கிளையில் கூடு அமைத்துக் கொண்டு அங்கு நீங்காமல் வாழத்தொடங்கியது. அவ்வாறு வந்தவரைப் பிரிந்து போகவிடாத கவர்ச்சியுடைய சோலை மலையில் வாழ்கின்ற மன்னன் ஆகிய அழகனுக்கு

'நாறு நறும்பொழில் மாலிருஞ் சோலைநம் பிக்குநான் நூறு தடாவில்வெண் ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடாநிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்றுவந்து இவை கொள்ளுங்கொலோ என்ற பாடலில் நூறு தடாவில் வெண்ணெயும் நூறு தடா நிறைந்த சருக்கரைப் பொங்க(அக்கார அடிசி)லும் படைப்பதாக வாய்நேர்ந்து பராவி வைத்திருந்தாய்!