பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 154

ஆண்டாளே! நீ வாய்நேர்ந்தருளியதைக் கருதியும், காவேரி வளைந்த திருவரங்கம் பெரிய கோயிலில் வாழ்ந்த அண்ணன் (உண்டயவர்) அன்பினால் உலகை வாழ்விக்கும் நம்மாழ்வார்க்குத் திருமகள் ஆகிய உரிமைக்குச் சீர்வரிசை செய்ய வேண்டியது கடமை எனக் கருதியும், இனிய அன்பு பெறும்படி வெண்ணெயொடு தேன்

நிறைத்து அக்கார அடிசிலும் தைத் திங்களிலே இரு நூறொடு ஒரு நூறு பொன்னாலான தடாக்களிலே நிறைத்துப் படைத்தாய். அந்த உடையவர்

தங்கையாகிய இன் அமுதமே ஆண்டாளே! பொன்னுரசல் ஆடி அருளாய்! புதுவை மா மன்னராகிய வடபெருங்கோயிலுடையான்

திருமணம் செய்து கொள்ளத் தகுதி பெற்றவளே பொன்னூசல் ஆடி

அருளாய்!

கரம்தனில் சிரம்வைத்து இரந்தவன் இரப்பினைக்

களைகண்ண நின்னை அல்லால் களைகண் இங்கு ஆர்என்ன, அயனொடும் தேவர் பால்

கடல்புக்கு முறைஇட்ட நாள்

சிரங்கள்.ஒரு பத்தொடு கரங்கள் இரு பத்துடைத்

தெசமுகன் திசைமுகனை யே சிந்தித்து அடைந்தவரம் முழுதும்.அமர் முனையினில்

சிந்தவரி வில்குனித் தே

நிரந்தரம் அரந்தை அற் றவர்.உலகு தனிஆளும்

நெடுவாழ்வு தன்னிடத் தாய் நிலைபெறுத் தினன்நேய முறுதேவி என்றுனை

நினைந்துமய னால்அமைத் தே

புரந்தரன் வரம்தழைத் திடஅருளு நவமணிப்

பொன்ஊசல் ஆடியரு.ளே!

புதுவைமா நகர்மன்னர் வதுவைக்கு அமைந்துளாய்!

பொன்ஊசல் ஆடியரு ளே! (97)

கையில்ே மண்டையை (கபாலம்) ஏந்தி இரந்த சிவபிரானது பிச்சை ஏற்பைக் களைந்த கண்ணனே உன்னை அல்லால், பற்றுக்கோடு இங்கு வேறு யார் உளர்?' என்று நான்முகனொடும் தேவர்கள் பாற்கட வில் வந்து முறையிட்டபோது, தலைகள் பத்தும் கைகள் இருபதும் உடைய இராவணன் நான்முகனை நோக்கித் தவம் செய்து பெற்ற வரம் முழுவதும் போர்க்களத்தில் அழியும்படி வில்வளைத்தவன் திருமால்.