பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 ல் பொழிப்புரை - த. கோவேந்தன்

SS0AS SSAS SSAS

துன்பமானது நிலையாகத் தீர்ந்து, தேவர் உலகம் முழுவதும் தான்ே தனியாக ஆள்கின்ற நீண்ட வாழ்வினைத் தன்னிடத்தே நிலை பெறச் செய்த திருமாலின் அன்புக்கு உரிய திருத்தேவி என்று உன்னை நினைந்து, இந்திரன் வரம் பெறுவதற்காக அருளிய ஒளிர் ஒன்பது (நவமணிகள்) பதித்த பொன்னுரசலை ஆண்டாளே ஆடி அருள்வாய்!

புதுவைமாநகர்மன்னர்திருமணத்துக்குத்தகுந்தவளே கோதையே! பொன்னுரசல் ஆடியருள்வாய்!

சேமம் புரிந்துள இலங்கையில் புன்தொழில்

தெசமுகன் தன்னைநீங் கிச் சென்றுஅடைக் கலம்எனப் பாகனொடு கூடிய

திருத்தம்பி என்றுஎனக் கு நாமம் தரிப்பித்த கருணேசன் இன்பம்.உறு

நன்குலத் தேவிஎன் றே நாடிவி டணன்இங்கு வரவிட்ட செம்பொன்செய்

நவமணிப் பொன்னுரசல் காண்

பாமங்கை யாழ்மங்கை போர்மங்கை புகழ்மங்கை

பாங்கர்நின்று அடிபணிந் தே

பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு எனத்தேவர்

பாவித்து நின்றுஇறைஞ் சப்

பூமங்கை புவிமங்கை என்னவான் வறுநங்கை!

பொன்ஊசல் ஆடியரு ளே!

புதுவைமா நகர்மன்னர் வதுவைக்கு அமைந்துளாய்

பொன்ஊசல் ஆடியரு ளே! (98)

பாதுகாப்பு அமைந்தது இலங்கை அந் நகரை ஆண்டவன் இராவணன். அவன் பிறன்மனை நயத்தல் என்ற பெருங்குற்றம் இழைத் தான்். அதனால் அவன் தம்பி வீடணன் தன் பாகனொடு கூடி இலங் கையை விட்டு நீங்கி, அடைக்கலம் என்று இராமனை அடைந்தான்். இராமன் அவனைத் தம்பியாக ஏற்றுக்கொண்டான்.

அதனால் மகிழ்ந்த வீடணன் திருத்தம்பி என்று பெயர் கொடுத்த அருளாளன் இன்பமுறும் நற்குலத் திருத்தேவி என்று விரும்பி உனக்கு அனுப்பிய செம்பொன்னால் செய்த பொன்னுரசல் இது பார்! பாமகள், யாழ்மகள், போர்மகள், புகழ்மகள் ஆகியோர் அருகில் நின்று அடிபணிந்து, பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு என்கின்றனர்.