பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 158

கன்னியும் பொருநையும் கங்கையும் யமுனையும்

காவேரி நதியும்என வாழ்

கடவுள்மா நதிகளின் அமுதம்உண்டு உறைபெறும்

கடவுளர் துறக்கத்து ளாய் w

மன்னிய அவைக்களத்து என்னையார் நிகர்என்ன

வரததி உரைத்தமாற் றம்

மறிபுனல் காவேரி உற்று இறை வனைத் தனது

மடியில்வைத் திடுவன் என வே

முன்உரைத்து உறுதவம் முயன்றவொரு சோழசன்

முன்தவம் புளியுநினை வால் முத்தமிழ்ச் சோணாட்டு வாள்.அரா அணையிது

முளரிஅங் கண்முகிழ்த் துப் பொன்னியுள் துயில்குழகர் அழகர்மகிழ் வெய்தநீ

பொன்னூசல் ஆடியருளே! புதுவைஅந் தணர்பிரான் அருளும்அழ கியபுதல்வி

பொன்னுரசல் ஆடியருளே! (如伊

குமரி ஆறு தண்பொருநை (தாமிரவருணி)யும், கங்கையும், யமுனையும், காவேரியும் என வாழ்கின்ற தெய்வ ஆறுகளின் அமுதமாகிய நீரை உண்டு, பெருமை பெருகின்ற கடவுளாரின் துறக்கத்தில் இருந்து நிலைபெற்ற தேவர் ஒலக்கத்தில், கங்கையானது, என்னை நிகப்பவர் யார்? என்று இறுமாந்து பேசியதால், மறிபடும் புனலையுடைய காவேரி கங்கையை நோக்க, நீ இறைவன் காவில் தான்ே பிறந்தாய்? நான் தவம் செய்து அந்த இறைவனை என் மடியில் வைத்து உறங்க வைப்பேன், பார் என்று முன் சூள் உரைத்தது. அப்போது சோழ மன்னன் தன் நாட்டில் இறைவனை நிலையாக வாழ வைப்ப தற்காகத் தவம் செய்து கொண்டிருந்தான்். -

காவேரியும் தன் குளுரை (சபதம்) நிறைவேறும் பொருட்டுத் தவம் புரிந்தது. இவர்கள் இருவரின் தவத்தையும் நினைத்து முத்தமிழ் வழங்கும் சோழ நாட்டில் ஒளி பொருந்திய பாம்பனையில் தாமரைக் கண்கள் மூடி, காவேரி நடுவில் அறிதுயில் கொண்ட இளமையுடைய அழகர் மகி மும்படி பொன்னுரசல் ஆடி அருளாய்!

புதுவை அந்தணர் பெருமான் அருளும் அழகிய புதல்வியே! ஆண்டாளே! பொன்னுரசல் ஆடி அருள்வாய்!