பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 ல் பொழிப்புரை - த கோவேந்தன்

வரிவளைக் குலம்இடம் புரிவளை வளைத்திடும்

வலம்புரித் திரள்வளைக் கும்

வாள்நிலா எழுசலஞ் சலம்.உறவு திருமல்லி

வளநாட்டுள் உனைமதித் தே

கரியமென் சுரிகுழல் படலத்து அரம்பைமார்

கைபுனை அரும்பு.அவிழ வே கட்டுண்ட மட்டுஉண் சுரும்பினொடு பெடைஅளிக்

கணம் மருங்கு ஊசலா டச்

சொரிகதிர்த் தரளமணி முழுமணி வடத்தொடு

துடக்கமென் புழுகின்முழு கும்

சுவனழ தரமுலை சுமந்துமின் கொடிஎனத்

துவள்மருங்கு ஊசலா டப்

புரிமணிக் குழை இரு மருங்கு ஊச லாடநீ

பொன்னூசல் ஆடியரு ளே! புதுவையா நகர்மன்னர் வதுவைக்கு அமைந்துளாய்!

பொன்னூசல் ஆடியரு ளே! (104)

வரிகளையுடைய சங்குக் கூட்டம் மூன்று வகைப்படும். முதலாவது இடம்புரிச்சங்கு இடம் புரிச்சங்கு ஆயிரம் சூழ நடுவில் இருப்பது வலம் புரிச் சங்கு வலம்புரி ஆயிரத்தில் ஒன்றாக இருப்பது சலஞ்சலச் சங்கு சலஞ்சலம் ஒளிகொண்ட நிலாவைப்போல் ஒளிர்வது. அத்தகைய சலஞ் சலங்கள் மிகுதியாக உலவுகின்ற இடம், திருமல்லி வளநாடு. அத் திருநாட்டில் உன்னை மதித்துப் போற்றி வானுலகத்து அரம்பையர் உன் கரிய மெல்லிய சுருண்ட இருண்ட கூந்தல் கற்றையைக் கையால் சீவி முடித்து ஒப்பனை செய்யும்போது, கூந்தலில் சூடிய மலர் அரும்புகள் விரியும்.

தேன் உண்ணும் ஆசையால் அந்த நறுமண அரும்புகளில் கட்டுண்டு தேன் உண்னும் வண்டுகளும் வண்டின் பெடைக் கூட்டமும் பக்கத்திலே ஊசல் ஆடும்.

ஒளி சொரிகின்ற முத்துமணிகள், முழுமணிகளால் ஆகிய மாலையுடன் கலந்தன. மெல்லிய மணம் தரும் புனுகினுடன் கலக்கின்ற பொன் மலை போன்ற தகில்களைச் சுமந்து கொண்டு வருவதால், மின்னற்கொடி போலத் துவள்கின்ற இடையும் ஊசல் ஆடும்.