பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 168

சீற்றமது எழுந்துதெண் திரைமண்டு கடவினைச்

சேதுபந் தனம்முடித் துத் -

தென்னிலங் கேசன் உயி ரைக்குடித்து அரியவன்

சிறைமீட்டு உனைத்தழுவி முன்பு

ஊற்றமது உறக்கறங்கு அறல்புகுந்து ஏனமாய்

உனைஒரு மருப்பினிற் கொண்டு

உய்த்துளான் நீபுலம் புறஇருப் பதும்இல்லை ஒருபகலுள் அணைவன்என் றால்

நோற்றநோன் பினர்பரவும் அபிராமை யேகாம

நோன்பினைத் தவிர்கரீ யே!

நோன்பினைத் தவிர்கரீ யே! (109)

கொடிய இராவணன் தன்னைக் கண்டால் கூற்றுவனும் எழுந்து விழுந்து தடுமாறி ஒடச் செய்பவன். அத்தகைய வடவைத்தி (வடவாமுக நெருப்புப் போன்ற சினமாகிய வெவ்விய தழலைப் பெருக்குபவன். அவன் முன்னாள் உன்னைச் சிறை வைத்தான்். நீ மனத்துட் குறிக் கோளாகக் கொண்டு தவம் செய்தாய்!

நீ சிறையிருப்பது அறிந்து சினம் பொங்கித் தெள்ளிய அலைகள் செறிந்த கடலிலே அணைகட்டி அந்த இராவணன் உயிரைக் குடித்தான்் திருமால், அரிய வவிய சிறையிலிருந்து உன்னை மீட்டுத் தழுவினான். அதுமட்டுமா?

முற்காலத்தில் ஆற்றல் மிகும்படி சுழல்கின்ற கடலுட் புகுந்து இரணியாக்கனைக் கொன்று மானமிலாப் பன்றியாய் உன்னை ஒரு கொம்பினால் தூக்கி நிலை நிறுத்தினான். அத்தகையவன், நீ காதலால் வருந்தும்படி பிரிந்திருக்க மாட்டான். ஒரே நாளில் உன்னை வந்து அணைத்துக் கொள்வான். ஆதலால், தவம் செய்தவர் துதிக்கின்ற பேரழ கியே ஆண்டாளே காம நோன்பினை நீ தவிர் துண்ணிய அறிவுடைய புதுவைப் பேரழகியே கோதையே காம நோன்பு நீ தவிர்க!

பாமநெட் டிலைமுத் தலைக்கவட் டுக்குவிச

பாணிபுத் தேளிருடன் முப்

பத்துமூ வரும்.அடி வணங்க வாழ்வு எய்துபொற் பதியினுள் புக்கநா ளில் -