பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173* பொழிப்புரை - த கோவேந்தன்

அனகன்.இங்கு உனைமறந்து ஒருகணப் பொழுதினும்

அகன்று இருப் பவன்என்பது ஆர்

அறிவுற்ற மறைகற்ற நிலைபெற்ற நின்பெருமை

அதனைநீ அறிகின்றி லாய்

மணமறிந் தனராகி அனவரதம் நினதுமலர்

மாளிகை திறந்துஅடைக் கும் வாயில்கா வலர்சந்தர சூரியர் நிரந்தரம்

வரம்தருக தருகஎன் றே

கனகநாட் டவரோடு முப்பத்து முக்கோடி

கடவுளரும் அடிவணங் கக்

காமன்வந்து அடிதொழும் புதுவைப் பிராட்டிநீ

காமநோன் பதுதவிர்க வே! (1/4)

செங்கதிர் போன்ற ஒளிவீசி எழுகின்ற மதாணி(கவுத்துவம்) ஆகிய செவ்விய குளிர்ந்த மணியை மார்பில் அணிந்தவன் திருமாள். எவ்வகை உலகங்கட்கும் தலைவி என்பதற்கு அடையாளமாக அரியனை பெறுமாறு அமைத்து, அதில் உன்னை அமர்வித்து அன்றலர்ந்த புதுமலர்களைத் துவும் சிறப்பினை உனக்கு உதவுகின்றவன் உலகளந்த பெருமாள்.

எக்குறையும் அற்ற மாசற்றவன் (அனகன்) ஆகிய அவன், உன்னை மறந்து ஒரு கணப் பொழுதும் பிரிந்திருக்க மாட்டான். பிரிந்திருப்பான் என்று சொன்னவர் யார்? அறிவுமிகக வேதம்கற்ற நிலைபெற்ற நின் பெருமையை நீ அறியவில்லையே! -

மனத்தில் நீயே தலைவி என்பதை அறிந்தவர்கள் ஆகி, நாடோறும் உன் மலர் மாளிகையைத் திறப்பதும் மூடுவதும் செய்கின்ற வாயில் காவலர் கதிரவனும் நிலவோனும் ஆவார்கள். நிலையாக வரம் தருக! தருக! என்றே பொன்னுலகத் தவரோடு முப்பத்துமுக்கோடி கடவுளரும் நின் அடியில் வணங்கக் காமனும் அவருடன் வந்து அடி தொழுகின்ற புதுவைப் பிராட்டியே ஆண்டாளே காம நோன்பு தவிர்!

ஒருகரும்பு உருவவில் குமரன்அவன் இருகரும்

புருவவில் குமரியாம் நீ

ஒன்றுகட் காவிஅம் பாணத்தை அளியநான்

உறநின்று உடக்குமவன், நீ