பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 174

செருமுகத்து உபயகட் காவிஅம் பாணம்

திருத்தகப் புகுமுகத் தால் செஞ்செவே அளியநான் உறநின்று உடக்கிதிறை

திறை கொள்ளும் நோக்கத்தி நீ இருள்முகக் கங்குல் களிற்று அண்ணல் அவன்நீ

இரைத்து இரைத்து ஈரம்வற் றாது இழுக்குமான் மதம் உறக் கடபடாத் துடன்நிமிரும்

இணைமுலைக் களியானை யாய்!

கருமுகில் குழகர்அழ கரைவெல்ல உருவிளக்

காமன்ஏன் வில்லிபுத்தூர்க்

கன்னியே! நினதுதிரு உருஒன்றும் அமையுமே

காமநோன் பதுதவிர்க வே. (115)

காமனோ, ஒரு கரும்பாகிய உருவ வில்லையுடைய இளங்குமரன் நீயோ, இரு கரும்புருவ வில்லையுடைய இளங்குமரி காமனோ, பொருத்தமானகள் (சுரக்கும்) காவிமலர் அம்பினை வண்டாகிய நாண் உறுமாறு கொண்டு நின்று எய்டவன். - .

நீயோ, செருமுகத்தில் இருகட்கைாகி மலராகிய அழகிய அம்பினை அழகுறப் புகும் இடத்திலே (அரங்கன் திருவுள்ளத்திலே) நேராக அளிகருணையாகிய நாண் உறும்படி நின்று செலுத்தி அரங்கனது நிறையா கிய அறிவைக் கட்பமாகக் கொள்கின்ற காதற் பார்வையுடையவள்.

இருளை இடமாகக் கொண்ட இரவை யானையாக உடைய தலைவன்.அந்தக்காமன்.நீயோ அரங்கனை.அடையக்காலநீட்டிப்பு ஆவதால் நெடு மூச்செறிந்தாலும் அதனால் உலராமல், பூசிய மான்மதம் (கத்துரி) பொருந்தியதால், உடல் மறைக்கும் கச்சுடன் நிமிரும் இருமுலைகளாகிய களி யானைகளை உடையவள்.

காமனுக்கும் உனக்கும் இத்தகைய பல வேறு பாடுகள் இருக்கையில், கருமுகில் வண்ணராகிய இளமையுடைய அழகரை வெல்வதற்கு உருவில்லாத காமன் எதற்கு? புத்துர்க் கன்னியே! ஆண்டாளே! உன் அழகிய திருவுருவம் ஒன்றுமட்டும் போதுமே! ஆதலால், காம நோன்பினை விட்டுவிடு

குவளைஒண் கண்கழி'இப் பவளவாய் நித்திலக்

கோவையை விளக்கிமூன்றாய்க்

கொண்டததி ஒன்றுதிரு முக்குள்த் தைந்நீர்

குடைந்துதாழ் குழல்உறிை யே