பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ல் பொழிப்புரை த. கோவேந்தன்

உறுதியாகின்றது" செண்டு என்பது ஒருவகைப் படை என்று உ.வே.சா. அவர்கள் முயன்று பொருள் கண்டுள்ளார். அது முனை, வளைவாக இருக்குமாம்.துச்சாதனன் திரெளபதையை அந்தப் படையின் வளைவால் தர்ன் பற்றி இழுத்து வந்தான்ாம்.

இதுவரை கூறியதிலிருந்து சீவலமாறன் கதையைப் பிள்ளைத் தமிழ் ஆசிரியர் நன்கு கற்றிருக்கலாம் என்று உறுதியாகின்றது.

மன்னர் வரலாறு

அழகிய மன்னா)ர் என்பவர் யார்? ஆண்டாள் தோன்றுவதற்கு முன்பே வில்லிபுத்துளில் கோவில் கொண்டிருந்தாரா? இருந்தால் அங்கே குடிகொண்ட வடபெருங்ககோலுடையானைப் பாடிய ஆண்டாள், அழகிய மன்னரைப் பாடாமல் இருப்பாரா? என்ற ஐயங்கள் இயல்பாகவே எழத்தான்் செய்யும்.!

மன்னார் குடி என்ற திருப்பதியில் கோவில் கொண்டிருப்பவர் இராசமன்னார் என அழைக்கப்படுகின்றர்.

அவரைப் பற்றி ஆண்டாள் அறிந்திருந்ததாகத் தோன்றவில்லை. ஆதலால் அந்த இராக) மன்னாள் புதுவை அழகிய மன்னராக இருத்தல் இயலாது.

இதற்குத் தக்க விடைக்கனி பெறுவதற்குச் சீவலமாறன் கதைச் சோலையிலே, நாம் மீண்டும் புக வேண்டியுள்ளது.

சீவலமாறன் திருவில்லிபுத்துார் வருவதற்கு முன்பே, கங்கை ஆற்றுக்குப் புனலாடுதற்குப் போனான்.

அங்கே கங்கைக் கரையில் ஒர் அருஞ்செயல் நாடோறும் நிகழ்ந்து வந்தது. ஜவாய்ப்பாம்பு ஒன்று கங்கையிலிருந்து அழகிய மன்னர் சிலையை வாயில் கவ்விப் பிருகு முனிவரிடம் சேர்க்கும். முனிவர் அதற்குப் பூசனை செய்வார். பூசனை முடிந்ததும் அதே பாம்பு மன்னர் பெருமானை மீண்டும் கொண்டு கங்கையுள் மறையும்.

"அன்ன தன்மையைக் கங்கைநீர் ஆடச் சென்று அணையும் மன்னர் மன்னவன் கண்ணுறக் கண்டுமா தவத்தோன் தன்னை அன்பொடு தாழ்ந்துஉற வணங்கி, நீதக்கோய்? இன்ன விம்பமேது? இயம்புதி என முனி இயம்பும்.