பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுடைத் தலைவியின் வரலாறு

திருப்பாவையின் ஏற்றம் :

உடையவரிடம் ஒருவர் வந்து, "ஒருமுறை திருப்பாவைக்கு விளக்கவுரை செய்யவேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்.

"திருப்பல்லாண்டுக்குப் பொருள் சொல்ல ஆள் கிடைத்தாலும், திருப்பாவைக்கு ஆள் கிடையாது” என்று மறுத்து விட்டார் உடையவர்.

திருப்பல்லாண்டு நுட்பமான பொருள் உடையது. திருப்பாவை அதினும் மிகநுட்பமானது என்பது கருத்து.

ஆண்டாள் நாச்சியாரின் உயர்வு :

உடலையே உள்ளுயிரா(ஆன்மாவாக கருததாக நினைத்துள்ளவர் வினைத்தொடர்புடையவர் (சம்சாரிகள் எனப்படுவர். அவர்களைவிட மெய்யுணர்வாணர்கள் பலகோடி மடங்கு உயர்ந்தவர். அவர்களினும் அனைத்தினும் ஆள்பவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் பலமடங்கு உயர்ந்தவர். அவர்களினும் இறைவனுக்குப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் மிக மிக உயர்ந்தவர். அவரினும் ஆண்டாள் இறைவனையே ஆண்டதால் பற்பல மடங்கு உயர்ந்தவர் என்பது ஆசாரியர்களின் ஒரு மித்த கருத்து.

ஆழ்வார்கள் இறைவனால் மதிநலம் அருளப் பெற்றவர்கள். ஆண்டாள் இறைவனுக்கே மதிநலம் அருளினாள். உலகியலில் உறங்கிக் கிடந்த ஆழ்வார்களை இறைவன் எழுப்பினான். ஆண்டாள் இறைவனையே எழுப்பினாள்.

ஆழ்வார் பதின்மரும் பெற்ற மெய்யறிவு (ஞானம்) எல்லாம், பெறும் பேறாக (சீதனமாக ஆண்டாள் பக்கலிலே குடியேறியது, பத்துப் பேர்க்கு ஒரு பெண் பிள்ளை இவள் என்பவர் சான்றோர்.

இவ்வளவு பெருமைக்குரிய ஆண்டாளின் வரலாறு மிகவும் சுருக்கமானது. வரலாறு போலவே, இவர் இவ்வுலகில் வாழ்ந்த காலமும் மிகக் சுருங்கியதே.