பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ல் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

பலவிதமாய் நம் கண்கள் அமிர்தத்தை உண்ணும். வெள்ளப் பளிங்குபோல் மின்னுமே தூண்கள். விசித்திர நவ ரத்னம்போல் இலங்குமே படிகள். சித்திரத்தாலே சிறக்கும் சுவர்கள். செகசோதி போலத் துலங்குகோ புரங்கள்.

எங்கனும் பேர்பெற்ற இந்த ஆலயம்"

என்று "ஆண்டர்ள் ஆடி விழாச் சிந்து மாலை" இந் நகரின் சிறப்பை இசைத்துச் செல்கின்றது.

ஆண்டாள் தோற்றம்

வேதக்கோன் ஊர் என்று இவ்வூர் பெயர் பெறக் காரணமாகிய பெரியாழ்வார் (விண்டுசித்தர்), பெருமாளுக்குத் திருத்துளவத் தொண்டு செய்து கொண்டிருந்தாா.

அவர் ஒரு நாள் திருப பூஞ்சோலையில், துளசிச் செடிப் பாத்தியில் மண்ணைக் கொத்தும்போது, திருத்துழாய் அடியிலே இரு நிலனுாடு திருக்கிளரும் செம்பொன்னிறப் பேரொளிப் பிழம்பு ஒன்றைக் கண்டார். கூர்ந்து நோக்கியபோது, ஒரு தெய்வீகப் பெண்மகவு இருப்பதை அறிந்தார். அன்று ஆடிமாதம் பூர நட்சத்திரநாள்.

தோன்றுழியே அஞ்சு வயது ஒன்றிநின்றாள் என்று புதுவைச் சிலேடை வெண்பா கூறுவதுபோல், அந்த ஐந்து வயதுப் பெண்ணைத் தம் மகளாகவே நினைத்து வளர்த்து வரலானார் பெரியாழ்வார். கரும்பார் மொழிப் பேதையாகிய அவளுக்குச் "சுரும்பார் குழற்கோதை" என்று திருப்பெயர்சூட்டினார்.

ஆண்டாள் இயல்பு

இளமை முதலே இறைவனிடத்து இடையீடின்றி இளைப்பாறும் இன்னிழலான எதிர்ப்படும் தெளிவுடை அருளொழுகு நெஞ்சினனான ஏந்தலிடத்தே பெருவேட்கை எழுந்தது கோதைக்கு. மணந்தால் அவனையே மணப்பேன் என்னும் அளவுக்கு அன்பு வெள்ளம் கரை புரண்டோடியது. எம்பெருமான் எல்லாக் காட்சியும் இயற்கையில் உடையவனா வரலாறுகளையே எப்போழுதும் எண்ணுவதும் பேசுவதும் இசைப்பதும் அவளுக்கு இயல்பாயின.