பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் 大 39

சூடிக்கொடுத்தாள்

பெரியாழ்வார் வடபெருங் கோவிலுடையானுக்குச் சாத்துவதற்காகத் திருத்துழாய் மாலை கட்டி வைத்திருப்பார். அற்றம் நோக்கி அதை எடுத்துத் தன் கூந்தலிலே சூடிக் கொள்வாள் கோதை,

“காறை பூணும், கண்ணாடி காணும், தன்

கையில் வளைகுலுக்கும்,

கூறை உடுக்கும், அயர்க்கும் தன்

கொவ்வைச் செவ்வாய் திருத்தும்."

என்றபடி சிறந்த அணிகலன்கள் அணிவாள். உயர்ந்த பட்டாடை உடுத்து அலங்களித்துக் கொள்வாள்.

எம்பெருமானுக்கு ஏற்றமான மணமகளாய் இருக்கின்றேனா. பின்னர், மலர் மாலையைக் களைந்து முன்போலப்பூக்குடலையில் வைத்து விடுவார் மறைவாள் நடக்கின்ற இச் செய்தி பெரியாழ்வாருக்குத் தெரியவில்லை. அவர் அந்த மாலையை அப்படியே எம்பெருமானுக்குச் சாத்துவார். அவனும் அதைப் பேருவகையுடன் ஏற்றுக் கொள்வான்.

பெரியாழ்வர் dᏂ6}Ꭻ6ᏈᏱ6Ꮦ?

இங்கனம் பல நாள்கள் கடந்தன. ஒரு நாள வெளியே சென்றிருந்த பெரியாழ்வார். விரைவில் மீண்டு வந்தார். இறைவனுக்குரிய மாலையைச் சூடிக் கொண்டு பாடிக்கொண்டு கோதை நிற்பதைக் கண்டு திடுக்கிட்டார்.

"மகளே! நீசெய்வது பெரிய அடாத்தனம் அன்றோ இனி இப்படிச் செய்ய நினையாதே" என்று கடிந்து கொண்டார். தம் திருப்பணிக்கு முட்டுப்பாடு நேர்ந்தமைக்காக வருந்தி, அன்று இறைவனுக்கு மாலை சாத்தாமல் கண்வளர்ந் தருளினார்.

கனவிலே கண்ணன்

இறைவன். அவர் கனவிலே தோன்றினான். ஆழ்வர் இன்று எமக்கு மாலை ஏன் சாத்தவில்லை!" என்று வினவினான்.

தம் திருமகளாரின் தகாத செயலை விண்ணப்பம் செய்தார் பெரியாழ்வார்.