பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த. கோவேந்தன் 41

ஆன்றோர் காட்டிய வழி

அப்போது சில பெரியோர்கள் இராசக் கிரீடை செய்தபிறகு, கண்ணனைப் பிரிந்த ஆய்ச்சியர், தங்கள் ஆற்றாமையாலே கண்ணனாகத் தங்களை நினைந்து கொண்டு, உயிர் தரித்தார்கள். அப்படியே நீயும் செய்வாயாக" என்று ஆற்றுப்படுத்தினர்.

ஆய்ச்சியர் நினைப்பு

"கண்ணனாகக் கருதுவதைக் காட்டிலும் அவனாகவே நினைத்த ஆய்ச்சியராகக் கருதுவது நலம்" என்று தீர்மானித்தாள் ஆண்டாள்

வில்லிபுத்துரே திருவாய்ப் பாடியாகவும், அங்குள்ள பெண்களே இடைப் பெண்களாகவும், தம்மை அவர்களிலே ஒருத்தியாகவும் வடபெருங்கோவிலைத் திரு நந்தகோபர் திருமாளிகையாகவும், வட பெருங்கோயிலுடையானைக் கண்ணனாகவும் கருத்துட் கொண்டாள். இடைப் பெண்கள் நோற்ற நோன்பைத் தான்் நோற்கத் தொடங்கினாள் நினைவு முதிர்ச்சியால், ஆண்டாளுக்கு இடை நடையும் இடை முடியும் இடைப் பேச்சும் முடை நாற்றமும் உண்டாயின.

ஆய்ச்சியர் நோற்ற நோன்பு யாது?

ஆய்ச்சியர் நோற்ற நோன்பு யாது? அனைத்துலக அண்ணலான நாரணன், வையத்துயிர்களை உய்விப்பதற்காகக் கண்ணனாக அவதரித்தான்். இடைச் சேரியில் வளர்ந்தான்். அப்போது அவ்வூர்ப் பெரியோர்கள், "கண்ணன் விடலைப் பருவம் அடைந்தது விட்டான் அத்துடன் துடுக்காயும் உள்ளான். அவ்னுடன் அவ்வூர்ப் பெண்கள் இனிப் பழகலாகாது" என்று ஆய்ந்து பெண்களை வீட்டுக் காவலில் வைத்து

அப் பெண்கள் செய்த பேற்றினால், வருணன் மழைபொழியா தொழிந்தான்்.

அப்போது இடையர் எல்லோரும் கூடி "மழை பொழிவதற்காகப் பெண்கள் நோன்பு நோற்க வேண்டும். அந்த பொருள்களைத் தேடித்தர வேண்டும்" என்று முடிவு செய்தனர்.

என்று கருதிய கண்ணன், "என்னாலே முடியாது" என்று மறுத்தான்்.

பல நல் மொழிகள் சொல்லி வேண்டிக் கொண்டனர் ஆயர்.

ஒருவாறு இசைந்த கண்ணனிடம் பெண்களை ஒப்படைத்து விட்டு இடையர்