பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ★ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

தன்னை அணுகிய ஆய்ச்சியரிடம், இப்போது எல்லாரும் போய்ப் பின்னிரவில் வந்து நோன்புக்கு நீராடுவதற்காக என்னை எழுப்புங்கள்" என்று அமர்த்தம் செய்துவிட்டு நப்பின்னைப் பிராட்டியின் திருமாளிகையில் புகுந்தான்் கண்ணன்.

கண்ணனைப் பிரிந்து தரிக்காத பெண்கள் முற்படவிழித்துக் கண்ணனுடைய குணங்களையும் திருவிளையாடல்களையும் நினைத்துக் கிடக்கிறவர்களை உணர்த்திக் கொண்டு, நந்தகோபன் திருமாளிகைக்குச் சென்று, கண்ணனை எழுப்பித் தங்கள் விருப்பமான பணிவிடைகளைச் செய்து விரும்பியன பெற்று முடித்தார்கள் என்பது தான்் ஆய்ச்சியர் நோன்பு தோற்ற வரலாறு.

பாவை பாடிய பாவை

ஆண்டாளும் தம்மை ஒர் இடைப் பெண்ணாகக் கருதிக் கொண்டு, நோன்பு என்ற காரணத்தினால் இறைத் தொண்டை வேண்டிக் கொள்வதாய் அமைந்த திருப்பாவை என்ற திவ்வியப்பிரபந்தம்' உலகுக்கு உவந்தனித்தார். அவர் கொண்ட காதலின் வெளிப்பாடாக நாச்சியார் திருமொழியும் வெளிவந்தது.

தென்னரங்கன்பால் ஈடுபாடு

பருவவயது வந்த ஆண்டாளுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெரியாழ்வார் விரும்பினார்.

"மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்" என்ற ஆண்டாளின் உறுதி கண்டு உகந்தார் ஆயினும், அது நடைபெறுவது எப்படி என்று கலக்க முற்றார்.

எல்லாத் திவ்ய தேயத்துப் பெருமான்களின் பெருமைகளையும் ஆண்டாளுக்கு எடுத்துக் கூறி வந்தார் பெரியாழ்வார்.

அவர்களுள் தென்னரங்கத்து இன்னமுதருடைய குழலழகும். வாயழகும் கண்ணழகும கொப்பூழில் எழுதாமரைப் பூவழகும். ஆண்டாளின் நெஞ்சைக் கவர்ந்தன. "எனக்குத் தகுந்த மணவாளன்.

என்னரங்கத்து இன்னமுதனே' என்று தீர்மானித்தார்.