பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ★ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

அவையடக்கம்-2

செம்பொற் கலந்தனில் முல்லைமென் முகையின்

சிறந்தமெல் லடிசில் இமை யோர்

தெள்ளமு தெனும்சுவையுடைக்கருணை முக்கணித்

திரள்பெய்த பால்அள விச்

சம்பத்து அடைந்துஅருந் தியபுனிதர் புல்இலைத்

தளிகையிற் பவளமலை போல்

தழைநிறைத்து உப்பிலிப் புற்கைமோர் பெய்து உண்ட

தன்மையை நிகர்க்கும்ஒண் பொன்

கும்பத்தி னிற்புடைத்து எழுமுலைக் கோமளக்

கோதைகு டிக்கொடுத் தாள்,

கோதற்ற குரவர்முத லியபுனிதர் செஞ்சொல்உட்

கொண்டதன் செவிகள்.அதனால்

இம்பர்க்கு அமைந்தஇரு செவியினும் சிறிதுசென்று

ஏறாத வெளிறுடைத் தாய் ஏழையேன் அறிவற்று உரைத்தபுன் சொல்தனையும்

இனிது வந்து உட்கொண்ட தே!

[3] ஒளிமிக்க பொற்குடத்தைப்போல் பருத்து எழுகின்ற கொங்கை களையுடைய அழகிய கோதை சூடிக்கொடுத்தாள் குற்றமில்லாத ஆசிரியர் முதலிய துரயோர்களின் செவ்வியசொற்களைக் கேட்ட தன் காதுகளால்,

இவ்வுலகிற்கு அமைந்த இரு செவிகளிலும் சற்றே சென்று ஏறாத வெளிறு (அறியாமை) உடையதாக அறிவிலியாகிய யான் அறிவின்றி உரைத்த புல்லிய சொல்லினையும் இனிதாக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டது எச்செயலை நிகர்க்கும் எனில்:

செம்பொன்னால் ஆகிய உண்கலத்தில் முல்லையின் மெல்லிய மொட்டைக்காட்டிலும் சிறந்த வெள்ளிய அன்னத்தை,

இமையவர் உண்ணும் தெள்ளிய அமுது போன்ற சுவையுடைய பொரிக்கறியும் முக் கணித் திரளும் கலந்த பாலை அளாவிச் செல்வம் மிக்கவர்களாய் இருந்து அருந்திய துரயோர்கள், புல்லிய இலையாலாகிய தொன்னை என்னும் உண்கலத்தில் பவளமலை போன்ற இலை திறத்தையுடைய உப்பில்லாத கூழினை மோர் ஊற்றி உண்ட தன்மையை ஒக்கும்.