பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த. கோவேந்தன் * 49

மெய்யறிவுக் குறி (ஞான முத்திரை) எனப்படும். வாய் பேசாமல் அமைதியாலேயே இம் மெய்ப்பொருள் உணர்த்துபவனே ஆசாரியன்.

கையில் இந்தத் திருஅறிவுக்குறி தரித்துத் தவம் செய்தவர் சடகோபர்.

திரு அறிவுக்குறி தரித்த தாமரை மலர்போன்ற கைத்தலம் கொண்டவர் செண்பகச் சடகோபன். திண்டிமப் பறை முழக்கிப் புலவரை வாதுக்கு அழைப்பவர் பாவேந்தர் பண்டிதப் பாவலர் எனப்படுவர். அத்தகையப் பாவலர்க்குத் தலைவர் அவர்.

ஒன்றுக்கும் பற்றாத அடியேனையும் இப் பேருலகில் தாமே வலிய எழுந்தருளி அடிமை கொண்டவர்.

மதுரகவியாழ்வார் பேரின்பம் பெறத் துதிக்கின்ற பெருமான். அந்த தம்மாழ்வாரை எப்போதும் மறவாது வணங்குவோம். எதற்காக எனில்:

வெள்ளம் பெருநீராகப் பெருக்கெடுத்துப் பெறற்கரிய முத்து முதலிய மன்னிக் குலத்தோடு பசும்பொன்னைக் கொழித்துக் கொண்டு ஒலியெழுப்பும் காவிரி நடுவுபாட்டும் பள்ளி கொள்ளும் அரங்கனாகிய அமுதினை அருந்தித் தூய்மை பெற்ற கோயில் ஆண்ணன் என்னும் தகைமை நிரம்பிய குருவாகிய அறிவு முதல்வனைத் துதிக்கும் என் நாவினிடம் குடிகொண்ட வில்லிபுத்துார்க் கோதைப் பிராட்டியைப் போற்றும் பிள்ளைத்தமிழ்க் கவிதையை அடியேன் குற்றமின்றிக் கூறுவதற்காக.

உடையவரின் ஆசாரியர் ஐவர்

பருமா மணிக்கிரீடச்சோதி ஆதிப் பரப்பிரம வாழ்வு தழை வான்

பாரில் ஒர் ஐவராம் அவருள்நம் பிகள்மூவர்

பாதார விந்த மல ரைக்

கருமா முகிற்குலம் தவழ்சோலை மலைநின்ற

கண்ணனை வணங்கிiழும்

கங்குலில் கைவிளக்கு ஏந்தியே முன்சென்று

கருணையைக் காட்டு முதன் மைத்

திருமாலை ஆண்டான் எனும்பரம தேசிகன்

திருவடிப் போதைவாழ்வு ஆர்