பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த. கோவேந்தன் * 51

கொண்டதொர் குறிப்பினொடு வடபெருங் கோயிலார்

கோயிலது, நந்தகோ பன் குலவிஉளம் மகிழ்கொள்ளும் மாளிகைய தாகக்

குறித்து, அதில் புண்டரீகக் கண்துயிலும் ஆலிலைப் பள்ளியார் தனதுஅருள்

காந்தன்ஆ கவும் மனத் துள் கருதி இடை மொழியும்இடை நடையும்இடை

உடையினொடு கைக்கொண்டு கருணைகூ ரத்

தெண்திரை வளாகத்து மல்லிநாட் டுள் ஒரு

திருப்பாவை பாடினார் தம் செம்பொன்ஒண் கிண்கிணிச் சரணார விந்தம் என்

சென்னியில் குடினே னே. (7)

தேவர்கள் திரு ஆய்ப்பாடி ஆயர்களாகவும், ஆயர்மங்கையர்

ன்வயம் புகழ் வில்லிபுத்துார் வாழும் மங்கையர் ஆகவும் நப்பின்னைப் பிராட்டி (ஆண்டாள் ஆகிய தான்ே ஆம் என்பது உண்மை ஆகவும் இப்படிக்கொண்ட குறிப்புடனே) வடபெருங் கோயிலார் கோயிலது நந்தகோபன் குலவி உள்ளம் மகிழ்வுகொள்ளும் திருமாளிகை அதனை மாளிகையாகப் பாவித்துக்கொண்டு, அம் மாளிகையில் தாமரைக் கண் துயில்கின்ற ஆலின் இலைப் பள்ளியான், தன் அருட்கணவனாகவும் மனத்தில் நினைத்து, இடைமொழி, இடைநடை, இடைஉடை ஆகியவற்றை மேற்கொண்டு, அருள்கூரத் தெள்ளியகடல் சூழ்ந்த நானிலத்து மல்லிநாட்டுள்ளே ஒப்பற்ற திருப்பாவை பாடிய கோதைநாச்சியாருடைய செம்பொன்னாலாகிய ஒள்ளிய கிண்கிணி (சிலம்பு) அணிந்த அடித் தாமரையை என் தலையில் சூடிக்கொண்டேன்.