பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52★ ஆண்டாள் பிள்ள்ைத்தமிழ்

பாட்டுடைத் தலைவி 2

சிங்கக் கருணை எனச் சிறுவர்

திருமுன் றிவின்கண் தவழ்போதில்

திருமுக் குளத்தெண் திரைக்கரையுள் சிதறிப் புளினம் கடந்த சினைச்

சங்கத் திரள்வீதியைக் கடந்து

சலதா ரையையும் கடந்து உயிர்த்த தரளத் திரளில் தவழமுழந்

தாளில் உறைப்ப வருந்திடலும்

மங்கைப் பருவத் தினர் எடுத்து

மணிக்காந் தளின் மெல் லடி வருடி மழைக்கண் கலுழ்நீரினைத் துடைத்து மழலைக் கனிவா யினை மோந்து

கொங்கைத் துணைக்கே அணைத்து அமுதம் கொடுத்துஇன்றுசெந் தமிழ்ப் புதுவைக் கோதைத் திருஇங்கு எனதுரத்தில்

குடிகொண் டதற்கு என் சொல்வேனோ! (8) .

வில்லிபுத்துசரில் சின்னஞ்சிறார் அரிமாக்குட்டி போல் திமிர்த்து வீட்டின் முற்றத்தில் தவழ்ந்து விளையாடுவர்.

அவ்வூரில் உள்ளது திருமுக்குளம். சினை கொண்ட சங்குக் கூட்டம் அக் குளத்தின் தெள்ளிய அலைகள் மோதும் கரையில் சிதறி வீழும். அங்கிருந்து மணல்மேட்டைக் கடக்கும். பின்பு அங்கிருந்து கழிவு நீர் வடியும் வழியைக் கடக்கும். தெருவை அடைந்து முத்துகளை ஈனும். அந்த முத்துத் திரள், தெருவில் தவழும் சிறாரின் முழந்தாளில் அழுந்தும். அதனால் சிறார் வருந்துவர்.

உடனே மங்கைப் பருவப் பெண்டிர் அவர்களை வாரி எடுத்து, முத்து அழுந்திய அழகிய காந்தன் மலர்போன்ற மெல்லிய அடிகளை வருடுவர். குளிர்ந்த கண்களில் சுரக்கும் கண்ணிரைத் துடைப்பர். மழலை உதிர்க்கும் கனிவாயினை மோப்பர். தங்கள் இரு நகில்களிலும் அணைத்துப் பால் ஊட்டி இன்பமுறுவர். அத்தகைய ஊர் புதுவை. அங்கு எங்கும் செந்தமிழ் மணக்கும். அங்குத் தோன்றியவர் கோதைப் பிராட்டி. அவள் என் உள்ளத்தில் குடிகொண்டுள்ளாள். அந்தப் பேருதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன்! எவ்வகைக் கைம்மாறும் செய்ய இயலாது.