பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த. கோவேந்தன் 女 53

பாட்டுடைத்தலைவி 3

நஞ்சாய்ப் பழுத்தபடி வரும்இராவணனைமுதல்

நாளில் வென்று, "இன்று போய் நீ

நாளைவா!" என்று முன்பு இரணியன் தனதா

நயந்தவச் சிரஉடலை யே

பஞ்சாய்ப் பழுத்ததோர் படலம்என உகிரினில்

பகிர்செய்து அவற்றினுட னே

பஞ்சவர் சகாயன்ஆ கியஅரங் கன்முதற்

பாரில்ஐ வரைஎய்து - வான்

மஞ்சாய்ப் பழுத்தமென்சுரிகுழல் பிறைநுதல்

வளைந்தவில் புருவம்ஒளி தோய்

வாளிஉண் கண் கமல மதிமுகத் தரள நகை

மழலைமொழி ஐந்துவயதில்

பிஞ்சாய்ப் பழுத்தபெண் அமுதநற் கனியினைப்

பிள்ளைக் கவிப்பாட லால் பெருநிலத்து ஏத்தியே சந்ததம் சிந்தையுள்

பேரின்பம் எய்தினே னே! (9)

நஞ்சாகி முதிர்ந்ததுபோல் வருகின்ற இராவணனை முதல் நாளில் வென்று, "இன்றுபோய் நாளை வா!' என்று கூறியவன் அரங்கஇராமன். --

இறைவன் உடைமையாகிய தன் உயிரையும், வச்சிரம் போன்று வலிய உடலையும் தன்னுடையனவாக விரும்பினான் பொன்னன் இரணியன்). அவனது உடலைப் பஞ்சினால் முற்றிய கூடுபோல கை நகங்களால் இரு கூறாகச் செய்தான்் அரங்கன்(ஆளா).

இச்செயல்கள் மட்டுமல்ல. அவற்றுடன் பாண்டவர்க்குத் துணை ஆகியவன் அவன். அந்த ஒருவனே ஐந்துருவாகிய அரங்கள் முதலாக வடமலை வாணன், சோலை மலை அழகள், வடபெருங்கோவில் ஆலின் இலைப் பள்ளியான், அழகிய மன்னர் ஆகிய ஐவரையும் மணவாளர்களாக அடைவதற்காக விரும்பினாள் ஆண்டாள்.