பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த. கோவேந்தன் * 57

மதிவைத்த மாநிதியை வைத்தகோளுர்வந்த

மதுரகவி யைப்போற்று தும்: மல்லிநாட் டினுள்வில்லி புத்துர் மடந்தையை

வழுத்தும்என் கவிதழைய வே.

(12) மல்லிநாட்டினுள் உள்ள வில்லிபுத்துார் ஆண்டாள் நாச்சியாரை வழுத்துகின்ற என் (பிள்ளைக்)கவி தழையும் பொருட்டு, கங்கை ஆற்றை வைத்த சடையில் இளம்பிறை வைத்தும் பெருமை படைத்த பாம்பை நடுவிலே வைத்தவன் சிவன். விண்மீன்களைச் சடையில் வைத்ததுபோல் தேன்பொருந்திய (வெண்) தும்பை மலரை ஒருபக்கமாக வைத்துள்ளான். உண்டார்க்கு இறப்பு) நோய் உண்டாக்கும் நஞ்சத்தைக் குடித்ததால், விடத்தின் கறையைக் கொண்ட கழுத்தினன் அவன்.

வேல் போன்ற கூரிய கண்களைக்கொண்ட உமையவளைத் தன் உடலில் பாதியாக வைத்த அந்த சிவனுக்குத் தன் தலையைக் கிள்ளியதால் பிரமன் தந்த சாபத்தையும், தன் அகன்ற கையிலே வைத்த வலிய மண்டையோடாகிய பிச்சைக் கலயத்தையும் ஒழியும்படி செய்த தமிழ் மறையாகிய திருவாய்மொழிப் பட்டோலையை, நாவிறர் ஆகிய சடகோபர் சொல்லிக்கொண்டே வர எழுதிவைத்தவர் மதுரகவி அவர் எழுதிய பட்டோலையால், எமன் தொகுத்து எழுதி வைத்த உயிர்களின் (பாவப்பட்டியலாகிய) நெட்டோலையைக் கிழித்து எறிந்தார். அவ்வாறு கிழித்து எறிந்தமையால், அடியார் ஒளிமயமான வீடுபேறு (பரமபதம்) எய்தினார். மதுரகவி பிறந்த ஊர், தேவர்கள் மதியில் வைத்த பெரும்பொருளைத் தன்னிடம் வைத்த திருக்கோளுர், அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவிடத்தில் தோன்றிய மதுரகவியைப் போற்றுவோம்.

மதுரகவி 2

எந்நன்றி கொண்டாலும் அந்நன்றி கொண்டவர்

இயற்றுகைம் மாறும்.உலகத் தினில்உண்டு மலர்மங்கை கொழுநனே பரன்என்று

இருட்டுஅறுத்து இருபசை அறச் செய்ந்நன்றி கொண்டதற்கு எதிர்இல்லை யால் வெண்ணை

திருடிஉண்டவன்என்பதில் சிந்தையுட் புக்ககுரு கூர்நம்பி என எனது

திருநாவில் அமுதம்ஊறும்