பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த. கோவேந்தன் * 59

பெருவாழ்வு பெற்றதிரை பொங்கஒரு பத்தில்நிறை

பெற்றுள குடந்தைஅமு தால்

பேரின்பம் எய்துதலும் வீரநா ராயணன்

பேர்அருளி னோன்.அணவுறும்

குருகா புரிப்பரம குருகுலோத் தமனை வண்

கோளுரன் உரைசெய்நூல் உள்

கொண்டுஉரை தியானத்தில் எண்ஐந்து நாளின்அக்

குழகனால் எழுதிஅதனுள்

பொருள் வாய்மை அமுதினைப் புலவர்க்கு அளித்து உலகு

புகழ்உலவு நாதமுனி கள் பொன்னடி வணங்குதும் புத்துர் மடந்தையைப்

புகழும்என் கவிதழைய வே. (14)

ஒப்பற்ற நான்கு வேதங்களாகிய கற்பகமரத்தின் ஒள்ளிய கனிகள் உபநிடதங்கள். அவை இனிய வாழ்வு உற்றிடும் இடம் திருவாய்மொழி என்னும் கடல்.

அந்தக் கடலிடத்து ஒர் ஆயிரம் பாடலாகிய பெருவாழ்வு பெற்ற அலைகள் பொங்கின. அந்த அலைகள் ஒரு பக்கத்தில் நிறைவு பெற்றது குடந்தை (ஆரா) அமுது.

அந்த அமுதால் பேரின்பம் எய்தினார் நாதமுனிகள். வீரநாராயணபுரத்து வீரநாராயணனுக்கு ஆராஅமுதன் என்ற பெயரை அருளிய நம்மாழ்வார் பொருந்தி வாழ்ந்த (வாழ்கின்ற) இடம் குருகாபுரி.

அந்தக் குருகாபுரியில் பரம குருகுலச் சான்றோராகிய நம்மாழ்வாரைக் கோளூரிற் பிறந்த மதுரவி பாடிய "கண்ணிநுண் சிறுதாம்பு' என்ற நூலை மனத்துட் கொண்டு, ஒதிக்கொண்டே இருக்கின்ற தியானத்தால் நாற்பது நாள்களில், அந்த இளஞாயிறு ஆகிய நம்மாழ்வாரால், திருவாய்மொழிமுதல் நாலாயிரம் பாடல்களும் பெற்றார் நாதமுனி பெற்று அதனுட் பொருளாகிய வாய்மை அமுதினைப் புலமையுடையோர்க்கெல்லாம் அருளினார். அதனால் உலகெமெலாம் புகழ் உலவும் பெருமை பெற்றார். அவருடைய பொன்னடிகளை வணங்குவோம். ஏனெனில் வில்லிபுத்துார் ஆண்டாள் தாச்சியாரைப் புகழும் என் கவி தழையும் பொருட்டு.