பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 * ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

புகலும் மறையவர் பூபதிக்கு ஏற்றதுஓர் புதல்விஎன வருகாரணத் தோற்றம் ஏழ் புவனி முழுவதும் மாசுஅறப் போற்றவாழ் புதுவைநகர் வருகோதையைக் காக்கவே. (18)

மதுரமீனுடன் திமி என்னும் திமிங்கலம் போர்புரியும். அதைக்கண்டு வலிமை வாய்ந்த சுறாமீன்கள் மறுக்கம் அடையும் (அஞ்சும்) அஞ்சி அப்பால் ஏகும்.

அத்தகைய கடலுக்கும் மேலான தகுதியுடைய அமுதப்பொய்கை வரிசைகொண்டது, துழாய் மலர்க்காடு 'இவள் ஒப்பற்ற திருமகளே” என்றனர். சிலர் "பழம் பெரும் திருமாலே" என்று உறுதியாக நிலைநிறுத்திய அந்தண(வேதியர்க்குத் தகுந்த தலைவராகிய பெரியாழ்வாருக்குத் தகுதிவாய்ந்த புதல்வி இவள்" என்றனர்.

(தொகைப்பிறப்பு ஏழு வகைப்படும். அவை தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பன.)

இவற்றைக் காரணப் பிறப்பு என்றும் கூறுவர். இந்த உலக முழுவதிலும் பரவியுள்ள இந்த ஏழு வகையான உயிர்களும் வினைப்பயன் நீங்குவதற்காகத் தன்னைப் போற்றுமாறு வாழ்பவள் ஆண்டாள். அவள் சீர்வில்லிபுத்துாரில் பிறந்தவள். கோதை என்ற திருப்பெயரினள். அவளைக் காக்கும் பொருட்டு:

பொன்தகடு போன்ற தளிர்கள் தளிர்த்துப் பருவ மலராக மொட்டு விரிவது, வயிரம் பாய்ந்த வலிமை கொண்ட அகில் என்னும் ஒருவகை மன மரம். அதன் கிளைகளில் உலகை மூடிய இருள் போகும்படி துடைக்கின்ற வெண்ணிற முழுமதி மறுவாகிய மானுடன் இளைப்பாறித் தங்கும்.

மலைகளின் நடுவிடமும் உச்சியும், அந்த அகில் மரத்தில் ஒய்வெடுக்கும் முழுமதியைக் கிழிக்கும். அப்போது அந்த நிலவில் உள்ள அமுதமானது ஊற்றாகி, அந்த ஊற்று வரிசையான அருவிகளாகும். அவை சொரிகின்ற நீர்த்தாரைகள் திரண்டு விரைவாய் ஒடி அமுத ஆறாகும். அந்த ஆற்றில் தேன் நிரம்பும். அப்போது அமுத ஆற்றில் தேக்கு மரங்கள் நீங்காமல் மிதக்கும். அதனால் அந்த அமுத ஆறு கடலைப்போல் தேக்கெறியும். (அதாவது நிரம்ப உண்டவர் ஏப்பம் விடுவதுபோல் ஒலி எழுப்பும்) அந்த ஒலி, கடலானது ஆற்றுநீர் ஊற்றுநீர், வேற்று நீர் ஆகிய முந்நீரையும் நிரம்ப உண்டு ஏப்பம் விடுவது போல் தோன்றும்.