பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த. கோவேந்தன் * 65

நீலக்கடல் சூழ்ந்து மண்அணுக்கள் செறிந்து உள்ள உலகத்திலே மதுரைமன்னன் பாண்டியன், யார் முழுமுதற்பொருள் என்று அறிந்து கொள்வதற்காகக் கட்டிவைத்த பொற்கிழியை, மறைகள்ஒதி வென்று அறுத்துப் புகழில் ஓங்கினார் தலைவர் பெரியாழ்வார். அவர்களிடம் கூறும்படி, ஆடகப் பொன் இதழ் சூழ்ந்த தாமரைமலர் மாளிகையினும் சிறந்தது என்னும்படி வளவிய தமிழ் தழைத்த சீர்வில்லிபுத்துாரில், மல்லிநாட்டினுள் தோன்றியவள் ஆண்டாள். வஞ்சிக்கொடிபோலும் இடையையுடைய பெருந்திருப்பிராட்டியாகிய அவளை,

ஒளியை எழுப்பும் மூன்று பிளவு கொண்டதும் நெடிய இலை போன்ற நுனிகளுடையதுமான சூலம் ஏந்தியவன் சிவன். அவன் பிரமன் தலையைக் கிள்ளியதால் அத்தலை அவன் கையில் ஒட்டிக் கொண்டது. அதற்குக் காரணம் பிரமன் தந்த பண்டைய சாபம். அச் சாபத்தால் நாணம் சிவனைப் பற்றிக்கொண்டது. ஆதலால் பெருந்துன்பம் அடைந்தான்்.

அந்தத் துன்பம் தூண்டியதால், திருமாலின் எதிர்வந்து நின்று "நான், கபாலம் நிறையும் பொருட்டு இரப்பதை ஒழித்தருள்!" என்று வேண்டினான். திருமால், அவன் இழிவினைத் தீர்த்தான்். திருமால் இனிதாக வந்து எழுந்தருளிய இடம் வில்லிபுத்தூர் வடபெருங்கோயில். அந்த வடபெருங்கோயிலான் காப்பானாக.

செண்டலங்காரன்

தாதுஅளவி நறவுஅறாப் பரிமளத் தொடுசெவ்வி

சார்ந்து தண் இலையஆ கிச் சஞ்சரீ கம்சஞ் சளிக்கும்முன்பு அருணோ

தயத்தினில் தளை,அவிழும் அப் போதுஅளவிலாதநறு மலர்கொய்து தாதைகை

புனை புனித மாலைகு டிப் புரிகுழல் மணத்தொடும் அளித்ததிரு மகளைளப்

பொழுதினும் காக்க வள் ளைக்

காதுஅளவினும்சென்ற உண்கண்ணார் தண்புனல்

கலந்துஆட அணுகும்.அளவில்

கதிர்முலை முகட்டுஅருண மணிவெயிலும் நித்திலக்

காழ்குலாம்.நிலவும்நிமிரச்