பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 * ஆண்ட்ாள் பிள்ளைத்தமிழ்

சிதலக் கமலமுகை அவிழும் நண் பகலினும்

சேதாம்பல் முகுளம்மலரும் திருமுக் குளப்புதுவை நகர்வாழ வாழ்வுபயில்

செண்டலங் காரன்அரு ளே.

(19)

வள்ளைக்கொடி போன்ற காதின் அளவினும் நீண்டு சென்ற மையுண்ட கண்ணுடைய மகளிர், குளிர்ந்த நீரில் ஒன்றுகூடிக் குளிப்பதற்கு அணுகுவர். அவர்களின் ஒளிகொண்ட முலைகளின் உச்சியில் அணிந்த செம்மணிக் கலங்களின் செவ்விய மணிவெய்யிலும் முத்துமாலையின் ஒளி குலாவிய நிலாப்போன்ற ஒளியும் பரவும். அவ் ஒளிகளால், குளிர்ந்த தாமரை மொட்டு மலர்கின்ற நடுப்பகலிலும் செவ்வாம்பல் மொட்டு மலரும். அத் திருமுக்குளம் எனப் பெயர்பெற்ற நீர் நிலையுடைய வில்லிபுத்துரர் வாழ்வதற்காக அங்கேயே தங்கி வாழ்கின்ற செண்டலங்காரப் பெருமானின் அருள், மகரந்தம் கலந்து தேன் வற்றாத மனத்தோடு பருவச்செவ்வியும் சார்ந்திருக்கும் மலர்கள். அவை குளிர்ந்த இலைகளுடன் கூடி இருக்கும். அவற்றில் வண்டுகள தேன் உண்ணச் சுற்றிச் சுற்றி வரும். அதற்கு முன்பாகவே வைகறைச் செங்கதிரால் மொட்டுவிரியும் அந்த நறிய மலர்களைக் கொய்து வருவார் பெரியாழ்வார். பின்பு தம் கையால் புனித மாலையைத் தொடுத்து இறைவனுக்குச் சூட்டுவதற்காக வைப்பார்.

இறைவனுக்குரிய அம்மாலையை அவர் திருமகள ஆண்டாள் எடுத்துத் தன் சுருண்ட கூந்தலில் சூடிக் கண்ணாடியில், தான்் இறைவனுக்கு மனாட்டி ஆவதற்குத் தகுதி வாய்ந்தவளா என்று அழகு பார்ப்பாள். மீண்டும் இருந்தபடி வைத்துவிடுவாள். அவளின் சுருண்ட கூந்தலின் இயற்கை மனத்தொடும் அண்ணலுக்குச் சூடத் தருவாள். அத் திருமகளை எப்போதும் காப்பாற்றுக.

ஆதிசேடன்

பொறிக்கிங் கழகு புரப்பதொரு

பொறியாற் புவனத் தவர் நாட்டம்

புதைக்கும் இருளின் பிழம்பினையே

புறம்காண் அருணோதயம்எனவே

எறிக்கும் கிரண மவுலி கவிழ்த்து

இதம்செய் ஆணையம் திருநெடுமாற்கு

ஏற்றும் எழிலார் மணிவிளக்காம்

ஏந்தல் புரக்க அரிஅறல்போல்