பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த. கோவேந்தன் * 67

நெரிக்கும் கருமென் குழல்பிறைபோல்

நிழல்வாணுதல்இந் திரசாய நீலப் புருவம் கருங்குவளை

டுங்கண் கமலா னனம்முகுளம்

குறிக்கும் புளகக் களபமுலை

கொடிபோல் சுருங்கும் பிடிமருங்குல்

கோதைத் திருவைத் தமிழ்ப்புதுவைக்

கொழுங்கோ மளப்பொற் கொம்பினையே. (20) ,

திருமகளுக்கு அழகு காப்பதாகிய ஒப்பற்ற இயந்திரம் ஆம். புள்ளிகளால் உலகிலுள்ளாரின் கண்களை மறைக்கின்ற இருளின் திரட்சியைத் தோற்றோடச் செய்யும் செங்கதிர்த் தோற்றம் போல ஒளிவீசும் பொன்முடி புனைந்து திருமாலுக்கு நன்மை செய்கின்ற படுக்கையாம்;

திருநெடுமாலுக்கு ஏற்றிவைத்துள்ள அழகு நிரம்பிய விளக் காகும். இவ்வாறு இறைவன் கைங்கரியமே குறிக்கோளாகக் கொண்ட வானவர் நித்திய சூரிகளின் தலைவராகிய ஆதிசேடன்,

அலை அரித்த நுண்ணிய கருமணல் போன்று சுருண்ட கரிய மெல்லிய கூந்தலும், பிறைபோன்ற குளிர்ந்த ஒளியுடைய நெற்றியும், வானவில் போன்ற நீல நிறப் புருவமும், கருங்குவளை மலர்போன்ற நெடிய கண்களும், கமல மலர் போன்ற முகமும், மலர்மொட்டைக் புலவர் உவமையாக கூறுகின்ற பூரித்த களபம் பூசிய முலையும், கொடிபோல் சிறுத்த பிடிமருங்குலும் உடைய கோதைத் திருவை: தமிழ்ப் புதுவைக் கொழுங்கோமளப் பொன் கொம்பினைக் காப்பானாக!

புள்அரையன்

மல்லிமாமயில்பெற்ற வில்லியும் கண்டனும்

மாவேட்டை யாடுகாட் டுள்

வன்துணைத் தம்பியைப் புலிகொல்ல நோய்உற்ற

மறவனின் துயில்முகத் தில்

குல்லை.அம் தாமத்தன் எய்தியே நின்இளங்

குமரனுக்கு உயிர்அளிப்பன்

கோயில்இங் அருள்” என்று நிதி அருள, வடபெருங்

கோயில் முதலிய அமைத் தே