பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 * ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

அல்லிஅம் கமலை நாயகனுடன் புத்துருள்

அந்தணர்தமைக்கொணர்ந் தே

அகரமது தாபித்த காரணம் தோற்றுவான்

அவரொடும் தனதுபெயரால் -

வில்லிபுத் தூர் எனப் புகழ்பெற்ற திருநகருள்

விமலையைக் காக்க:எழு தா . . . . . .

வேதம் ஒரு நான்கையும் சிறைகொண்டபொறைகொண்ட

வித்ததகப் புள்அரசனே. (2)

மல்லி என்ற வேட்டுவப்பெண் மயிலின் சாயலினாள். அவள் பெற்ற மக்கள் இருவர். அவர்கள் பெயர் வில்லி, கண்டன் என்பன

அவர்கள் இருவரும் விலங்கு வேட்டையாடும் போது காட்டில்ே கண்டன் என்ற வலிய துணைத் தம்பியைப் புலி கொன்றது. அதனால் துன்பம் உழந்த வில்லி துரங்கிவிட்டான்.அப்போது கனவில் துளபத்தின் அழகிய மாலையை அணித்த திருமால் தோன்றினான்.

"தின் தம்பிக்கு நான் உயிர் அளிப்பேன் நீங்கள் இருவரும். எனக்கு ஒரு கோயிலை இவ்விடத்தில் அமையுங்கள்" என்று கூறிச் செல்வமும் உதவினான்.

அச்செல்வத்தைக் கொண்டு வடபெருங் கோயில் முதலிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன. அக்கோயிலில் அகஇதழ் அழகிய பூம்கள் தலைவன் எழுந்தருளினான்.

அங்கு அகரம் (அக்கிரகாரம்) ஏற்படுத்தி அந்தணர்களைக் குடியேற்றினர்.

அந்த அகரம் நிறுவிய காரணம் விளங்கும் பொருட்டு, வேடன் குலத்துப் புதல்வன் பெயரும் வில் அணிந்தமையால் வந்த வில்லி என்ற இறைவன் பெயரும் இணைந்து வில்லி என்பதுடன் புதுவதாக அமைந்த ஊர் என்பதால் புத்துர் என்பதையும் சேர்த்து வில்லிபுத்துளர் என்று புகழ் பெற்றது. அத் திருநகரம். அங்குத் தோன்றிய விமலையாகிய ஆண்டாள் நாயகியை எழுதா மறை (வேதம்) ஒரு நான்காகிய சிறகுகளையும் பொறுமையையும் கொண்ட பேரறிஞன் ஆகிய புள் அரசன் (கருடன்) காப்பாற்றுக. -