பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

ஆழிப்படைக் கடவுள்

ஒருமுலை கறந்தபால் ஒருபுடை குழக்கன்றும்

உண்டுவாய் மாறமுதலே - --

ஒருகுடம் மறைத்துமற் றொருகுடம் அளிக்குமுன்பு

உறுபெறம் முலை உக்க பால் -

அருமணித் திருமாட வீதியிற் பாலாழி

அளவினில் வளைப்பது ஏய்க் கும்

ஆயர்பாடிச்செல்வர் புத்துர்ப் பிறந்தபெண்

அரசியைக் காக்க: கொற்றக்

குருகுலத் தினில்முந்து நூற்றுவர் எனக்கொடுங்

கூற்றுஉரு உடுத்தஅனை யார்

கூற்றுவன் தன்பதி புகப்பே ரறங்கன் குடி

கொண்டசெங் கோல்நடாத் தித்

தருமன் முத லவர்பழம் பதி ஆள, நண்பகல்

தன்னைநல் லிரவதா கத்,

தரணியை மறைத்துமூ தண்ட வெளி முகடுதொடு

சக்ராயு தக்கடவு ளே. [22]

பசுக்களின் மடிகளில் ஒரு காம்பிலே பால் கறப்பர். ஒரு புறம் இளங்கன்றும் உண்ணும். உண்டு மறு காம்பில் வாய் மாற்றி வைக்கும் அந்த இடைவெளியில் முன்பு நிறைந்துபோன பால் குடத்தை மறைத்து மற்றொரு குடம் வைப்பர். அப்படி வைக்குமுன் நிறைந்த பசுக்களின் டிடிப் பால் நிலத்தில் ஒழுகும். அந்தப் பால், விலை மதித்தற்கு அரிய மணிகள் பரவிக் கிடக்கும் அழகிய மாட வீதியிலே பாற்கடல் வளைத்துக் கொள்வதைப் போலும்! அத்தகைய பசுச்செல்வம் மிக்கவர் ஆயர் பாடியினர். அவர்கள் வாழும் ஊர் சீர்வில்லிபுத்துார் அந்த ஊரில் பிறந்த பெண் அரசியாகிய ஆண்டாள்.

வெற்றிதங்கிய குரு குலத்தினில் பிறந்தவர் நூற்றுவர். அவர்கள் கூற்றம் மானுட வடிவம் கொண்டதைப் போன்றவர்கள். அவர்கள் மடிந்து எமனுலகம் புகவும் பெரிய அறங்கள் குடிகொள்ளவும் செங்கோல் நடத்தி; தருமன் முதலியோர் அரசாளவும் நண்பகல் இரவு' நேரம் போலாகவும் உலகை இருளால் மறைத்து மூதண்டவெளியில் உச்சியைத் தொட்ட சக்கரத்தாழ்வார் காப்பாற்றுக!